இது மொழியியலும் கணினி அறிவியலும் இணைந்தது __
Answers
Answered by
0
மொழியியல்
- மனிதன் தன் கருத்தினை பிறருக்கு வெளியிடப் பயன்படும் ஒரு முக்கிய கருவியாக உள்ளது மொழி ஆகும். அந்த மொழியினை அறிவியல் நோக்கில் ஆராய்வதற்கு அல்லது மொழிகள் பற்றிய அறிவியல் ஆய்வு படிப்பிற்கு மொழியியல் என்று பெயர். மொழியினை மனித மூளைப் பயன்படுத்தும் நுட்பத்தினை கணினிக்கு தந்து, அதன் மூலம் மொழி நுட்பக் கருவிகளை உருவாக்க இயலும்.
கணினி மொழியியல்
- மொழியியல் மற்றும் கணினி தொழில் நுட்பம் ஆகியவை இணைந்த செயல்பாட்டிற்கு கணினி மொழியியல் என்று பெயர். கணினி மொழியியலின் முக்கிய பங்கு இயற்கை மொழிக்கூறுகளை செயற்கையாக கணினிக்கு தகுந்தவாறு மாற்றி தருவதற்கான கோட்பாடுகள் மற்றும் செயல்பாடுகளை தருவது ஆகும்.
Similar questions