India Languages, asked by arjunsaneesh7352, 1 year ago

பொருள் அறிதல்:
மாண்புகழ்,மன்னும்,

Answers

Answered by Anonymous
0

Answer:

பொழிப்பு: காமநோயாகிய கடல் இருக்கின்றது; ஆனால், அதை நீந்திக் கடந்து செல்வதற்கு வேண்டிய காவலான தோணியோ இல்லை

மணக்குடவர் உரை: காமக்கடல் நிலையாக உண்டே; அது கடக்கும் ஏமமாகிய புணை நிலையாக இல்லையே.

இது தலைமகள் ஆற்றாமை கண்டு நெருங்கிக் கூறிய தோழியைக் குறித்து நமக்குத் துணையாவார் இல்லையெனத் தலைமகள் கூறியது

பரிமேலழகர் உரை: (தலைவியர் காமக்கடற் படார், படினும், அதனை ஏற்றபுணையான் நீந்திக் கடப்பார் என்ற தோழிக்குச் சொல்லியது.) உண்டு காமக்கடலே - யாவர்க்கும் உளவாய் வருகின்ற இவ் இரண்டனுள்ளும் எனக்கு உண்டாகின்றது காமக்கடலே; அது நீந்தும் ஏமப்புணை இல் - அதனை நீந்தும் அரணாகிய புணை இல்லை.

(இருவழியும் மன்னும் உம்மும் அசைநிலை. 'தூதுவிட்டு இதற்குப் புணையாகற் பாலையாய் நீயும ஆயிற்றிலை' என்பது கருத்து.)

இரா சாரங்கபாணி உரை: காமக் கடல் உறுதியாக என்னிடம் உண்டு. ஆனால் அதனை நீந்திக் கடத்தற்குரிய துணையாகிய தெப்பம் இல்லை.

பொருள்கோள் வரிஅமைப்பு:

காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும் ஏமப் புணைமன்னும் இல்.

காமக் கடல்மன்னும் உண்டே:

பதவுரை: காமக்-காமமாகிய கடல்-கடல். மன்னும்(-மிகுதியாக; உண்டே-உளதே.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:

மணக்குடவர்: காமக்கடல் நிலையாக உண்டே;

பரிப்பெருமாள்: காமக்கடல் நிலையாக உண்டே;

காலிங்கர்: தோழி! அவரால் ஆகிய காமநோய் என்னும் பெருவெள்ளமானது மிகவும் உளதே;

பரிமேலழகர்: (தலைவியர் காமக்கடற் படார், படினும், அதனை ஏற்றபுணையான் நீந்திக் கடப்பார் என்ற தோழிக்குச் சொல்லியது.) யாவர்க்கும் உளவாய் வருகின்ற இவ் இரண்டனுள்ளும் எனக்கு உண்டாகின்றது காமக்கடலே;

'காமநோய் என்னும் கடல் மிகவும் உளதே' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள ' காமக் கடல் மட்டும் உண்டு.', ' காமம் கடல்போல் இருக்கிறது. !', 'காமக் கடலே நிலைத்திருக்கின்றது. ', 'காதல் கடல் நிச்சயமாக உண்டே! ',என்ற பொருளில் உரை தந்தனர்.

காதல் கடலுக்கு ஒன்றும் குறைவில்லை என்பது இப்பகுதியின் பொருள்.

அதுநீந்தும் ஏமப் புணை மன்னும் இல்:

பதவுரை: அது-அது; நீந்தும்-கடத்தற்கு; ஏம-அரணாகிய; புணை-தெப்பம்; மன்னும்(-உறுதியாக; இல்-இல்லை-.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:

மணக்குடவர்: அது கடக்கும் ஏமமாகிய புணை நிலையாக இல்லையே.

மணக்குடவர் குறிப்புரை: இது தலைமகள் ஆற்றாமை கண்டு நெருங்கிக் கூறிய தோழியைக் குறித்து நமக்குத் துணையாவார் இல்லையெனத் தலைமகள் கூறியது

பரிப்பெருமாள்: அது கடக்கும் ஏமமாகிய புணை நிலையாக இல்லையே.

பரிப்பெருமாள் குறிப்புரை: இது தலைமகள் ஆற்றாமை கண்டு நெருங்கிக் கூறிய தோழியைக் குறித்து நமக்குத் துணையாவார் இல்லையெனத் தலைமகள் கூறியது

காலிங்கர்: மற்று இனி அது நீந்திக் கரை ஏறு நிலைமைத்தாகிய இறுதி மிதவை ஈண்டு இல்லை என்றவாறு.

பரிமேலழகர்: அதனை நீந்தும் அரணாகிய புணை இல்லை.

பரிமேலழகர் குறிப்புரை: இருவழியும் மன்னும் உம்மும் அசைநிலை. 'தூதுவிட்டு இதற்குப் புணையாகற் பாலையாய் நீயும ஆயிற்றிலை' என்பது கருத்து.

'அது நீந்திக் கரை ஏறு நிலைமைத்தாகிய இறுதி மிதவை ஈண்டு இல்லை' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அதனைக் கடக்கச் சேமத் தெப்பம்தான் இல்லை ', 'ஆனால் அக்கடலைக் கடக்க எனக்குப் பாதுகாப்பளிக்கும் மரக்கலமாகிய என காதலர் இங்கில்லையே', 'அதனைக் கரௌஏறுவதற்கு உதவும் பாதுகாப்பாகிய தெப்பம் யாதும் இல்லை', 'ஆனால் அதனை நீந்திக் கடக்கும் காவலமைந்த தெப்பம் இல்லையே 'என்றபடி பொருள் உரைத்தனர்.

அதனைக் கடக்கப் பாதுகாப்பான தெப்பம்தான் இங்கில்லை என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:

காதலரின்றி கடல் அளவிலான காதல்துன்பத்தை எப்படிக் கடக்க முடியும்? என்று வேதனை அடைகிறாள் தலைவி.

காதல் கடலுக்கு ஒன்றும் குறைவில்லை ; அதனைக் கடக்கப் பாதுகாப்பான தெப்பம்தான் இங்கில்லை என்பது பாடலின் பொருள்.

'மன்னும்' என்றால் என்ன?

காமக் கடல் என்றது காதலாகிய கடலைக் குறித்தது.

உண்டே என்ற சொல்லுக்கு -உளதே என்று பொருள்.

அது என்றது 'அக்கடலைச்' சுட்டும்.

நீந்தும் என்ற சொல் கடக்கும் என்ற பொருளது.

ஏமப் புணை என்பது பாதுகாப்பான தோணி என்ற பொருள் தரும்.

இல் என்ற சொல்லுக்கு இல்லை என்பது பொருள்.

தலைவன் தொழில்முறை காரணமாகப் பிரிந்து சென்றுள்ளான். அவன் இங்கு உடன் இல்லாததால் தலைவியைப் பிரிவுத் துன்பம் வாட்டுகிறது. அவளது காதல்துன்பம் கரை காணமுடியாத கடலளவு பெருகி நிற்கிறதாக உணர்கின்றாள். அப்பொழுது அவள் கூறுகிறாள்: காதல் கடல் மிகுந்தே உள்ளது. 'எப்படி இதைக் கடப்பேன்? பாதுகாப்பான கலம் இருந்தால்தான் அது முடியும்? அதுவும் இங்கில்லையே. என் செய்வேன்?' .

எல்லையற்ற காதல் துன்பத்தில் வருந்தும் தலைவிக்கு அத்துயரம் கடல் அளவு பெரிதாக, கடக்க முடியுமா என்று மலைக்கும்படி உள்ளது. அதற்கு ஒரே ஒரு வழிதான் உண்டு. அது பாதுகாப்பான தோணி. அந்தத் தோணியானது என் காதலர் அருகில் இருந்து காதல் செய்வது மட்டுமே ஆகும். அதுவும் இப்பொழுது உறுதியாக இல்லையே. அவர் வந்தால்தான் என் துன்பம் நீங்கும் எனப் புலம்புகிறாள் அவள்.

'மன்னும்' என்றால் என்ன?

மன்னும் 'உம்மும் அசைநிலைகள் என்பார் பரிமேலழகர். ஆனால் மன்னும் என்னும் சொல்லுக்கு மணக்குடவர் நிலைத்தல் என்று பொருள் கூறி உரை செய்கிறார். முதல் மன்னும் என்னும் சொல்லுக்கு மிகவும் அதாவது மிகுதியாக எனவும் அடுத்த மன்னும் என்பதற்கு ஈண்டு) என்றும் பொருள் கூறுவார் காலிங்கர். இச்சொல்லுக்கு இலக்குவனார் உறுதியாக எனக் கொண்டு உரை வரைகிறார்.

இவற்றுள் காலிங்கர் கூறும் பொருள்கள் பொருத்தமாகப்படுகின்றன.

காதல் கடல் மிகையாகத்தான் உளது அதனைக் கடக்கப் பாதுகாப்பளிக்கும் தெப்பம்தான் இங்கில்லை என்பது இக்குறட்கருத்து.

அதிகார இயைபு

காதல் கடலில் நின்று தத்தளிக்கும் என்னை எப்பொழுது வந்து கரை சேர்ப்பார் என் காதலர் என்று காதலி புலம்பும் படர் மெலிந்து இரங்கல் பாடல்.

பொழிப்பு

காதல்நோய் கடலாக மிகுந்து தெரிகிறதே! அதனைக் கடக்கத் துணையாகிய தெப்பம் இங்கு இல்லையே

Answered by anjalin
1

மாண்புகழ்,  மன்னும்.  

மாண்புகழ்:

  • மாண்புகழ் என்பதன் பொருள் உச்சம், புகழ் என்பதாகவும், பெரும்புகழ் என்பதாகவும், மிகப்பெரிய பெருமைக்குரியது, என்கிற பொருள்களை தரக்கூடியது.
  • இந்த வார்த்தையை தமிழைப் பற்றி புகழும் பெருஞ்சித்தனார் தம் பாடலில் “திருக்குறளின் மாண்புகழே” என்று புகழ்ந்து பாடுவர்.

மன்னும்:

  • மன்னும் என்பதன் பொருள் நெடுங்காலமாக இருக்கக்கூடிய அதாவது நிலைத்து நிற்கக்கூடிய என்கின்ற பொருளை தரும்.
  • இந்த வார்த்தையும் தமிழைப் பற்றி தன் கவிதையில் புகழும் பெருஞ்சித்தனார் அவர்கள் “மன்னுஞ் சிலம்பே” என்று புகழ்ந்து பாடுவர்.
  • அதாவது நிலைத்து நிற்கும் சிலப்பதிகாரமே என்பார்.
  • இவ்விரண்டு வார்த்தையும் அன்னை மொழியே என்ற தலைப்பில் கீழ் தமிழின் பெருமையை தம் பாடலில் வெளிப்படுத்தும் பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் பாடலில் அமையப் பெற்ற வார்த்தை வரிகளாகும்.
Similar questions