India Languages, asked by Dragenous2285, 11 months ago

தொகாநிலைத் தொடர் என்றால் என்ன அது எத்தனை வகை அவை யாவை ?

Answers

Answered by Anonymous
18
தொடரியல் பகுப்பாய்வி எ‌ன்பது க‌ணி‌னி‌யி‌ன் வ‌ழியே தொட‌ரிய‌ல் செய‌லா‌க்க‌‌த்‌தினை செ‌ய்யு‌ம் கரு‌வி ஆகு‌ம். மொ‌ழி‌யி‌ய‌ல் அடி‌ப்படை‌யி‌ல் அனைத்து‌ச் சொ‌ற்களு‌க்கு‌ம் வழ‌ங்க‌ப்ப‌ட்டு இரு‌க்கு‌ம் இல‌க்கண கு‌றி‌ப்‌பி‌னை கொ‌ண்டு செய‌ல்படு‌ம் கரு‌வி ஆகு‌ம். அனை‌த்து வகை பெய‌ர், ‌வினை, இடை‌‌ச் சொற்‌க‌ள், எ‌ச்ச‌ங்க‌ள், அடைமொ‌ழிக‌ள்,  சொ‌ல்லுருபுக‌ள், ‌வினா‌‌ச் சொ‌ற்க‌ள் ப‌ற்‌றிய கு‌றி‌ப்புகளை கொ‌ண்டு பகு‌‌க்க‌ப்ப‌ட்டிரு‌‌க்கு‌ம். இ‌வ்வகை பகு‌ப்பானது அ‌ந்த தொட‌ரி‌ல் உ‌ள்ள ஒ‌‌வ்வோ‌ர் அலைகயு‌ம் இன‌ம் கா‌ட்டு‌ம். ஒரு பனுவ‌லி‌ல் சொ‌ற்றொட‌ர்களை தொட‌ர்பகு‌ப்‌பி ‌பி‌ரி‌க்கு‌ம். இது எ‌ந்‌திர மொ‌ழிபெய‌ர்‌ப்பு‌க்கு பெ‌ரிது‌ம் பய‌ன்படு‌ம். தொடரியல் பகுப்பாய்வி கரு‌‌வி ஆனது தொட‌ரி‌ல் இல‌க்கண ‌பிழை உ‌ள்ளதா இ‌ல்லையா எ‌ன்பதை க‌ண்ட‌றி‌ந்து ‌திரு‌‌‌த்து‌ம். இது இல‌க்கண‌ ‌‌பிழை ‌திரு‌த்‌தியை உருவா‌க்க பய‌ன்படு‌கிறது.  

Answered by steffiaspinno
43

தொகாநிலைத் தொடர்கள்:

  • ஒரு தொடர் மொழியில் இருசொற்கள் இருந்து அவற்றின் இடையில் சொல்லோ உருபோ இல்லாமல் அப்படியே, பொருளை உணர்த்துவது தொகாநிலைத் தொடர் எனப்படும்.
  • தொகாநிலைத் தொடர்கள் ஒன்பது வகைப்படும். அவை,

எழுவாய்த்தொடர்:

  • பெயர்ச்சொல்லைத் தொடர்ந்து பெயர், வினை, வினா ஆகிய பயனிலைகள் வருவது  எழுவாய்த்தொடர் ஆகும்.

பெயரெச்சத் தொடர்:

  • முற்றுப்பெறாத வினைச்சொல்,பெயர்சொல்லைக் கொண்டு முடிவது  பெயரெச்சத்தொடர் எனப்படும்.

வினைமுற்றுத் தொடர்:

  • வினை முற்றுடன் ஒரு பெயர்ச்சொல் வருவது  வினைமுற்றுத் தொடர் ஆகும்.

வினையெச்சத்தொடர்:

  • முற்றுப்பெறாத வினைச்சொல் மற்றொரு வினையைக் கொண்டு முடிவது  

வேற்றுமைத்தொடர்:

  • வேற்றுமை உருபுகள் பயின்று வரும் தொடர்கள் வேற்றுமைத்தொடர்கள் ஆகும்.

இடைச்சொல் தொடர்:

  • இடைச்சொல்லை தொடர்ந்து பெயரோ வினையோ வருவது இடைச்சொல் தொடர்  

விளித் தொடர்:

  • விளியுடன்  வினைச்சொல் வருவது  விளித் தொடர் ஆகும்.

உரிச்சொல் தொடர்:

  • உரிச்சொல்லைத் தொடர்ந்து பெயரோ வினையோ வருவது உரிச்சொல் தொடர் ஆகும்.

அடுக்குத்தொடர்:  

  • ஒரு சொல்  இரண்டு மூன்று முறை அடுக்கி வருவது  அடுக்குத்தொடர் ஆகும்.  
Similar questions