குறைந்தளவு காற்றோட்டமுள்ள அறையில் கார்பன் எரிபொருளை எரிக்கும்போது,
அங்கு இருப்பது ஆப்பத்தானது, ஏன்?
Answers
Answered by
1
Answer:
good afternoon
our your question in English
Answered by
0
குறைந்தளவு காற்றோட்டமுள்ள அறையில் கார்பன் எரிபொருளை எரிக்கும்போது,அங்கு இருப்பது ஆபத்தானது.
- குறைந்த அளவு காற்றோட்டமுள்ள அறையில் கார்பன் எரிபொருளை எரிக்கும்போது, எரிபொருள் பகுதி அளவு எரிக்கப்பட்டு நச்சுத்தன்மையுடைய கார்பன் மோனாக்ஸைடு வாயு உருவாகிறது.
- கார்பன் மோனாக்ஸைடு நீரில் பகுதியளவு கரையும் தன்மை கொண்டது. நிறமற்றது, மணமற்றது. அதிக நச்சுத்தன்மை கொண்டது.
- நீர் வாயுவின் முக்கிய பகுதி பொருளாகவும் மற்றும் ஒடுக்கும் காரணியாகவும் கார்பன் மோனாக்ஸைடு செயல்படுகிறது.
- கார்பன் மோனாக்ஸைடு சுவாசிப்பதால் மூச்சுத் திணறல் ஏற்படும்.
- மனிதர்கள் இதை சுவாசிக்கும் போது இது மனித உடலுக்குள் நுழைந்து ஹிமோகுளோபினை தாக்குகிறது.
- மேலும் ஹிமோகுளோபினில் காணப்படும் ஆக்சிஜனை இடப்பெயர்ச்சி செய்கிறது.
- இதன் மூலம் மனித உடலின் பாகங்களுக்கு ஆக்சிஜன் செல்வது தடைபட்டு மரணம் ஏற்பட வழி வகுக்கிறது.
Similar questions