பண்ணைக் குட்டை என்ற அணுகுமுறையானது ஒரு நீர்ப் பாதுகாப்பு
முறையாகும். எல்லா விவசாயிகளாலும் ஏன் இந்த முறையை அவர்களின்
வயல்களில் கட்டமைத்து பயன்படுத்த முடியவில்லை ?
Answers
Answered by
0
பண்ணைக் குட்டைகளின் அமைப்பு :
- பண்ணைக் குட்டை அமைப்பு என்பது நிலத்தில் ஓரு குறிப்பிட்ட அளவும் வடிவமும் கொண்ட தோண்டப்பட்ட அமைப்பாகும்.
- இந்த அமைப்பானது விவசாய நிலங்களில் இருந்து வரும் நீரைச் சேமிப்பதற்கேற்ற உள்ளீடு மற்றும் வெளியீடு அமைப்பைக் கொண்டுள்ளது.
- இதன் மூலம் சேமிக்கப்பட்ட நீரானது பாசனத்திற்காக பயன்படுத்தப்படுகின்றது.
- வறண்ட கோடைக்காலங்களிலும் இந்த நீரானது விவசாயத்திற்காக பயன்படுத்தப்படுகிறது.
பண்ணைக் குட்டைகளின் நன்மைகள்:
- நிலத்தடி நீர்மட்டத்தின் அளவினை உயர்த்துகிறது.
- மண் அரிப்பை கட்டுப்படுத்துகிறது.
- இந்த நன்னீரானது மீன் வளர்ப்பிற்கு உகந்ததாகும்.
- கால்நடைகளுக்கும் வீட்டுத்தேவைகளுக்கும் தேவையான நீரை தருகிறது.
பண்ணைக் குட்டைகளின் குறைகள்:
- இந்த பண்ணைக் குட்டைகள் விளைநிலங்களில் இருந்து வரும் நீரை பெற்றுக்கொள்வதால் மற்ற நீர்நிலைகளான ஏரிகள் மற்றும் குட்டைகளுக்குப் பாய்ந்தோடும் நீரின் அளவை குறைக்கின்றது.
- விளை நிலங்களை அதிகளவு ஆக்கிரமித்துக் கொள்வதால் விவசாயிகளால் இந்த முறையை வயல்களில் பயன்படுத்த முடியவில்லை.
Similar questions
Economy,
5 months ago
Accountancy,
5 months ago
Science,
11 months ago
Science,
11 months ago
Math,
1 year ago
Social Sciences,
1 year ago