கூற்று: ஆங்கில அரசாங்கம் தடையற்ற
வணிகக் கொள்கையைப்
பின்பற்றியது.
காரணம் : இங்கிலாந்தின் தடையற்ற வணிகக்
கொள்கையினால் இந்தியா
நன்மையைப் பெற்றது.
(அ) கூற்று சரி. ஆனால் காரணம் கூற்றை
விளக்கவில்லை
(ஆ) கூற்று சரி. காரணம் கூற்றை விளக்குகிறது
(இ) கூற்று சரி; காரணம் தவறு
(ஈ) கூற்று காரணம் இரண்டும் தவறு
Answers
Answered by
0
சரியா தவறா
கூற்று சரியாக உள்ளது. ஆனால் காரணம் தவறு ஆகும்.
- ஆங்கில அரசாங்கம் தடையற்ற வணிகக் கொள்கையைப் அல்லது கட்டுபாடுகள் அற்ற சுதந்திர வணிகக் கொள்கையைப் பின்பற்றியது.
- பருத்தி, சணல், பட்டு முதலிய கச்சாப் பொருட்கள் இங்கிலாந்திற்கு இந்தியாவில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டன.
- பருத்தி, சணல், பட்டினால் உருவாக்கப்பட்ட பொருட்கள் இங்கிலாந்திலிருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்டன.
- இவை இந்திய சந்தையில் மலைப் போல குவிந்தன.
- இந்திய கைத்தறி துணிகளை விட இறக்குமதி செய்யப்பட்ட துணிகளின் விலை குறைவாக இருந்தது.
- இதனால் இந்திய பொருட்களின் மதிப்பு குறைந்தது.
- இதனால் நெசவாளர்கள், காலணிகள் தயாரிப்போர், பருத்தி இழையில் ஆடை தயாரிப்போர், தச்சர், கொல்லர் முதலியனோர் வேலையற்று போனர்.
- அவுரி பயிரை விளைச்சல் செய்ய விவசாயிகள் வற்புறுத்தப்பட்டனர்.
Similar questions