இந்தோனேஷியா மற்றும் பிலிப்பைன்ஸ்
நாடுகளின் விடுதலைப் போராட்டங்களில்
பொதுவான மற்றும் வேறுபட்ட கூறுகளை
ஒப்பிட்டாய்ந்து எழுதுக
Answers
Answered by
0
இந்தோனேஷியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளின் விடுதலைப் போராட்டங்கள்
பொதுவான கூறுகள்
- இந்தோனேஷியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய இரு நாடுகளும் ஐரோப்பாவின் காலனியாக இருந்தன.
- இரு நாடுகளிலும் காலனி ஆதிக்கத்திற்கு எதிராக பொது உடைமைவாதிகள் குரல் கொடுத்தனர்.
- இரண்டாம் உலகப் போரின் போது இரு நாடுகளுமே ஜப்பானின் பிடியில் சிக்கின.
- இரண்டு நாடுகளுமே இரண்டாம் உலகப் போருக்கு பின் விடுதலை அடைந்தன.
வேறுபட்ட கூறுகள்
- பிலிப்பைன்ஸ் ஸ்பானிய காலனி நாடு.
- இந்தோனேஷியா டச்சு காலனி நாடு.
- தேசிய உணர்வுகள் பிற பகுதிகளில் தோன்றுவதற்கு முன்பே பிலிப்பைன்ஸ் நாட்டில் தோன்றியது.
- ஆனால் இந்தோனேஷியாவில் தாமாதமாகவே தோன்றியது.
- 1946ல் பிலிப்பைன்சும், 1949ல் இந்தோனேஷியாவும் விடுதலை அடைந்தன.
Similar questions