கூற்று: மார்ஷல் திட்டத்தை "டாலர்
ஏகாதிபத்தியம்" என சோவியத் வெளியுறவுத்
துறை அமைச்சர் இகழ்ந்தார்.
காரணம்: சோவியத்தின் கண்ணோட்டத்தில்
மார்ஷல் திட்டமென்பது அமெரிக்காவின்
செல்வாக்கைப் பரப்புவதற்கான சூழ்ச்சியே ஆகும்.
அ. கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம்
கூற்றை விளக்குகிறது.
ஆ. கூற்று காரணம் இரண்டும் சரி. ஆனால்
காரணம் கூற்றை விளக்கவில்லை.
இ. கூற்று சரி. காரணம் தவறு.
ஈ. கூற்று தவறு. காரணம் சரி.
Answers
Answered by
1
கூற்று மற்றும் காரணம்
கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.
- 1947 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் அமெரிக்க அரசுச் செயலாளர் ஜார்ஜ். C. மார்ஷல் ஒரு பொருளாதாரத் திட்டத்தை கொண்டு வந்தார்.
- இரண்டாம் உலகப் போரால் பாதிப்பிற்குள்ளான ஐரோப்பிய நாடுகளுக்காக இந்த திட்டத்தினை கொண்டு வந்தார்.
- இதை ஐரோப்பிய மீட்புத் திட்டம் என குறிப்பிட்டார்.
- இந்த திட்டத்தில் எங்களின் கொள்கை எந்த நாட்டிற்கும் எதிரானதல்ல அல்லது எந்தக் கோட்பாட்டிற்கும் எதிரானதல்ல.
- ஆனால் பசி, வறுமை, விரக்தி மற்றும் குழப்பங்கள் ஆகியவற்றிற்கு எதிரானது என அறிவித்தார்.
- சோவியத்தின் கண்ணோட்டத்தில் மார்ஷல் திட்டமென்பது அமெரிக்காவின் செல்வாக்கைப் பரப்புவதற்கான சூழ்ச்சியாக கருதப்பட்டது.
- எனவே மார்ஷல் திட்டத்தை டாலர் ஏகாதிபத்தியம் என சோவியத் வெளியுறவுத் துறை அமைச்சர் இகழ்ந்தார்.
Answered by
0
Explanation:
1947 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் அமெரிக்க அரசுச் செயலாளர் ஜார்ஜ். C. மார்ஷல் ஒரு பொருளாதாரத் திட்டத்தை கொண்டு வந்தார்.
Similar questions