கோமிங்பார்ம்’ குறித்து நீங்கள் அறிவதென்ன?
Answers
Answer:
இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம் மாதிரி வினாத்தாள்
12th Standard TM
வரலாறு
Time : 00:45:00 Hrs
Total Marks : 30
5 x 1 = 5
1.
'பனிப் போர்’ எனும் சொல்லை உருவாக்கியவர்
(a) பெர்னாட் பரூச் (b) ஜார்ஜ் ஆர்வெல் (c) ஜார்ஜ் கென்னன் (d) சர்ச்சில்
2.
கூற்று: மார்ஷல் திட்டத்தை “டாலர் ஏகாதிபத்தியம்” என சோவியத் வெளியுறவுத் துறை அமைச்சர் இகழ்ந்தா ர்.
காரணம்: சோவியத்தின் கண்ணோட்டத்தில் மார்ஷல் திட்டமென்பது அமெரிக்காவின் செல்வாக்கைப் பரப்புவதற்கா ன சூழ்ச்சியே ஆகும்.
(a) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது. (b) கூற்று காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை . (c) கூற்று சரி. காரணம் தவறு. (d) கூற்று தவறு. காரணம் சரி.
3.
மார்ஷல் உதவித் திட்டத்தின் குறிக்கோள் _________
(a) ஐரோப்பியப் பொருளாதாரத்தை மறுகட்டுமானம் செய்வது (b) முதலாளித்துவத் தொழில் முயற்சிகளைப் பாதுகாப்பது (c) ஐரோப்பாவில் அமெரிக்காவின் மேலாதிக்கத்தை நிறுவுவது (d) சோவியத் ரஷ்யாவிற்கு எதிராக இராணுவக் கூட்டமைப்பை உருவாக்குவது
4.
ட்ரூமன் கோட்பாடு ________ பரிந்துரைத்தது
(a) கம்யூனிசம் பரவுவதைத் தடுப்பதற்கான நிதியுதவி (b) காலனிகளிலுள்ள கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவது (c) கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடுவது (d) அமெரிக்கத் தளபதியின் தலைமையின் கீழ் ஐ.நா சபைக்கு நிரந்தரப் படையை உருவாக்குவது
5.
“மூன்றாம் உலகம்” எனும் பதத்தை ________ உருவாக்கியவர் ஆவார்.
(a) ஆல்பிரட் சாவே (b) மார்ஷல் (c) மோலோடோவ் (d) ஹாரி ட்ரூமன்
3 x 2 = 6
6.
ஐ.நா சபையில் நிறைவேற்றப்பட்ட “அமைதிக்காக இணைகிறோம்” எனும் தீர்மா னத்தின் சிறப்பினைக் குறிப்பிடவும்
7.
'கோமிங்பார்ம்’ குறித்து நீங்கள் அறிவதென்ன?
8.
பனிப்போர் காலகட்டத்தைச் சேர்ந்த ‘மறை முக’ போர்களுக்கு எடுத்துக்காட்டுகள் தருக.
3 x 3 = 9
9.
ஐ.நா சபையின் சாசனம் முடிவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட தன் பல்வே று கட்டங்கள் குறித்து எழுதுக
10.
நேட்டோ உருவாக்கப்பட்டதின் பின்னணியைக் கண்டறியவும்.
11.
சூயஸ் கால்வாய் சிக்கல் குறித்து சுருக்கமாக வரைக
2 x 5 = 10
12.
அரபு-இஸ்ரேலிய முரண்பாட் டின் தோற்றத்தை விவாதிக்கவும். தொடர்ந்து ஏற்பட்ட நிகழ்வுகள் எவ்வாறு இரு நாடுகளுக்கிடையே 1967இல் பெரும் போர் ஏற்படக் காரணமாயிற்று என்பதை விளக்கவும்.
13.
“பாதுகாப்புக் கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர்கள் தொடர்பு கொண்டுள்ள பிரச்சனை களில் ஐ.நா சபை மௌனமான பார்வையாளராகவே இருந்தது “பனிப்போர் காலத்து அனுபவங்களின் வாயிலாக இக்கூற்றை விளக்கமாக எடுத்துரைக்கவும்
************************************
Other 12th Standard TM Subjects
உயிரியல் கணினி பயன்பாடுகள் கணினி அறிவியல் வணிகக் கணிதம் வணிகவியல் பொருளியல் கணிதவியல் வேதியியல் இயற்பியல் கணினி தொழில்நுட்பம் கணக்குப்பதிவியல்
Other 12th Standard TM
கோமின்பார்ம் (The Cominform)
- சோவியத்தின் கண்ணோட்டத்தில் மார்ஷல் திட்டமென்பது அமெரிக்காவின் செல்வாக்கைப் பரப்புவதற்கான சூழ்ச்சியாக கருதப்பட்டது.
- எனவே மார்ஷல் திட்டத்தை டாலர் ஏகாதிபத்தியம் என சோவியத் வெளியுறவுத் துறை அமைச்சர் இகழ்ந்தார்.
- மார்ஷல் திட்டத்திற்கு எதிராக 1947 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் கோமின்பார்ம் (The Cominform) எனும் அமைப்பை சோவியத் ரஷ்யா உருவாக்கியது.
- கோமின்பார்ம் அமைப்பில் ஐரோப்பிய நாடுகளில் இருந்த அனைத்து கம்யூனிஸ்ட் (பொது உடைமை வாதம்) கட்சியின் பிரிதிநிதிகள் உறுப்பினராக சேர்ந்தனர்.
- கோமின்பார்ம் அமைப்பானது கம்யூனிஸ்ட் அல்லாத நாடுகளுடன் வைத்திருந்த வணிக உறவினை தடுக்க முயன்றது.
- 1949 ஆம் ஆண்டு ரஷ்யா மோலோடோவ் திட்டத்தினை கொண்டு வந்தது.