அரசமைப்பில் குறிப்பிட்டுள்ள அதிகாரங்களின் பட்டியல் என்ன?
Answers
இந்திய அரசமைப்பின் ஏழாவது அட்டவணையில், மத்திய மற்றும் மாநிலங்களின் சட்டரீதியான அதிகாரங்களும் செயல்பாடுகளும் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன.
விளக்கம்:
இவையே மத்திய மற்றும் மாநில அரசுகள் சட்டம் இயற்றுவதற்கான அதிகாரங்கள் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த அதிகாரங்கள் மூன்றாக வகுக்கப்பட்டுள்ளன.
1. ஒன்றியப் பட்டியல் 2. மாநிலப் பட்டியல் 3. பொதுப் பட்டியல்
ஒன்றியப் பட்டியல்
ஒன்றியப் பட்டியலில் அடங்கியுள்ள துறைகள் மீது சட்டங்களை இயற்றுவதற்கும், நடைமுறையில் உள்ள சட்டங்களை மாற்றுவதற்கும் பிரத்யேகமான அதிகாரம் நாடாளுமன்றத்திடமே உள்ளது.
மத்திய அரசுச் சட்டம் இயற்ற அதிகாரம் உள்ள துறைகள்:
• பாதுகாப்பு
• வங்கி சேவை
• நாணயம்
• வெளிநாட்டு விவகாரங்கள்
• தகவல் தொடர்பு
மாநிலப் பட்டியல்
மாநிலப்பட்டியலில் குறிப்பிட்டுள்ள துறைகள் மீது பிரத்யேகமான அதிகாரம் மாநிலச் சட்டமன்றத்திடம் உள்ளது. மத்திய மற்றும் மாநில அரசுகள் இரண்டுமே பொதுவானப் பட்டியல் இரு அரசுகளும் இதில் உள்ள துறைகளில் சட்டம் இயற்றலாம்.
• கல்வி
• வனம்
• திருமணம்
• தத்து எடுத்தல்
• வாரிசுரிமை
பொதுப் பட்டியல்
பொதுப்பட்டியலில் குறிப்பிட்டுள்ள துறைகள் மீது மத்திய மற்றும் மாநில அரசுகள் சட்டம் இயற்றலாம் . மத்திய அரசிற்கும் மாநில அரசிற்கும் இடையேமுரண்பாடுகளின் போது மத்திய அரசின் அதிகாரமே மேலோங்கும். இந்த பட்டியலில் குறிப்பிடப்படாத எஞ்சியுள்ள அதிகாரங்கள் மத்திய அரசிடமே உள்ளது.
மாநில அரசுச் சட்டம் இயற்ற அதிகாரம் உள்ள துறைகள்:
• காவல்
• விவசாயம்
• நீர்ப்பாசனம்