பேசில்லரி சீதபேதி மற்றும் அமீபிக் சீதபேதி -
ஒப்பிட்டு வேறுபடுத்துக
Answers
Answered by
2
Answer:
in which language it is? ¿????
Answered by
4
பேசில்லரி சீதபேதி
- ஷிஜெல்லா என்னும் பாக்டீரியாவினால் பேசில்லரி சீதபேதி உருவாகிறது.
- பேசில்லரி சீதபேதியில் நோய் தொற்றும் பகுதி குடல் ஆகும்.
- மலக்கழிவு கலந்த உணவு மற்றும் நீரிலிருந்து நேரடியாக வாய் மற்றும் மலம் வழியாக பேசில்லரி சீதபேதி உண்டாக்கும் பாக்டீரியா நம் உடலில் பரவுகிறது.
- வயிற்று வலி, நீரிழப்பு, மலக்கழிவில் இரத்தம் மற்றும் கோழை காணப்படுதல் முதலியன இதன் அறிகுறிகள் ஆகும்.
அமீபிக் சீதபேதி
- எண்டமீபா ஹிஸ்டோலைடிகா என்னும் புரோட்டோசோவால் அமீபிக் சீதபேதி உருவாகிறது.
- அமீபிக் சீதபேதியில் நோய் தொற்றும் பகுதி பெருங்குடல் ஆகும்.
- மலக்கழிவு கலந்த கெட்டுப்போன உணவு மற்றும் நீரில் இருந்து ஒட்டுண்ணியை கடத்தும் கடத்தியாக வீட்டு ஈக்கள் மூலம் எண்டமீபா ஹிஸ்டோலைடிகா நம் உடலில் பரவுகிறது.
- வயிற்றுப்போக்கு, இரத்தம் மற்றும் கோழையுடன் கூடிய சீதபேதி முதலியன இதன் அறிகுறிகள் ஆகும்.
Similar questions