மூலச்சிற்றினங்கள் மரபற்று போவது
உயிரிய பல்வகைத்தன்மை இழப்பிற்கு –
வழிவகுத்தது- நியாயப்படுத்துக.
Answers
Answered by
6
I can't understand this language
Answered by
0
சிற்றினங்களின் மரபற்று போதல்
- ஒரு இனத்தின் ஒரு உறுப்பினர் கூட உயிருடன் இல்லாத நிலை ஏற்பட்டால் அந்த இனம் மரபற்றப் போனதாகக் கருதப்படும்.
- உலகில் ஏறத்தாழ 50 % தாவர மற்றும் விலங்கினங்கள் கடந்த 450 மில்லியன் ஆண்டுகளில் ஏற்பட்ட பேரழிவுகளினால் அழிந்து போய்விட்டது.
- மிக கடுமையான சுற்றுச்சூழல் மாற்றங்கள் மற்றும் இனத்தொகை பண்புகளும் உயிரினங்களின் அழிவிற்கு காரணமாக உள்ளன.
- பல்வகைத் தன்மை இழப்பிற்கும் சிற்றினங்களின் மரபற்று போதல் காரணமாக உள்ளது.
- மரபற்றுப் போதல் மூன்று வகைப்படும்.
இயற்கை வழி மரபற்றுப் போதல்
- நோய்கள், கொன்றுண்ணிகள், சுற்றுச்சூழல் மற்றும் பரிணாமத்தில் ஏற்பட்ட மாற்றங்களால் உயிரினங்கள் அழிவது இயற்கை வழி மரபற்றுப் போதல் ஆகும்.
பெருந்திரள் மரபற்றுப்போதல்
- நிலநடுக்கம் உள்ளிட்ட பெரிய அளவிலான இடர்களினால் உயிரினங்கள் அழிவது பெருந்திரள் மரபற்றுப்போதல் ஆகும்.
மானுட செயல்பாடுகளால் மரபற்றுப்போதல்
- இவை மிகை பயன்பாடு, நகரமயமாதல், வேட்டையாடுதல் முதலிய செயல்களால் ஏற்படும் அழிவுகள் ஆகும்.
Similar questions