மனித செயல்பாடுகளால் உயிரியப்
பல்வகைத்தன்மைக்கு ஏற்படும்
அச்சுறுத்தல்கள் யாவை- விளக்கு
Answers
Answered by
1
மனித செயல்பாடுகளால் உயிரியப் பல்வகைத் தன்மைக்கு ஏற்படும் அச்சுறுத்தல்கள்
- நிலம், நீர் மற்றும் உயிரினங்கள் முதலிய இயற்கை வளங்கள் மனிதர்களால் கட்டுபாடு இல்லாமல் மிக அதிகமாக சுரண்டப்பட்டு உள்ளது.
- மனித செயல்பாடுகளே அதிக அளவிலான பல்வகைத் தன்மையின் அழிவிற்கு காரணம் ஆகும்.
- மனித செயல்பாடுகள், நேரடியாக மற்றும் மறைமுகமாக உயிரிய பல்வகைத் தன்மையின் மீது அழிவினை தரும் தாக்கத்தினை ஏற்படுத்துவதாக உயிரிய பல்வகைத்தன்மை மாநாட்டில் கூறப்பட்டுள்ளது.
- மக்கள் தொகை பெருக்கம், பொருளாதாரம், தொழில்நுட்பங்கள், கலாச்சாரம் மற்றும் சமய காரணிகள் முதலியன பல்வகைத் தன்மையின் அழிவிற்கு காரணமான மறைமுக காரணிகள் ஆகும்.
- வெப்பமயமாதல், பருவமழை பொய்த்தல், ஓசோன் பாதிப்பு, மாசுபாடு முதலியனவற்றினால் பல்வகைத் தன்மை அழிந்து கொண்டு வருகிறது.
Similar questions