India Languages, asked by santu3562, 1 year ago

எளிய நுண்ணோக்கியின் விரிவாக விளக்கி எளிய நுண்ணோக்கியின் பயன்களை எழுதுக

Answers

Answered by rajveerjatpb6crt
1

microscope is very useful...

it helps us to see the microorganisms that we can't see naked eyes...

Answered by steffiaspinno
1

எளிய  நூண்ணோ்க்கியின்  அமைப்பு:  

  • குறைந்த  குவியத் தொலைவு கொண்ட குவி லென்சானது எளிய நுண்ணோக்கியாகச் செயல்படுகிறது.
  • குவிலென்சைக் கண்களுக்கு அருகில் வைத்து, பொருள்களைப் பார்க்கும் போது, பொருட்களின் பெரிதாக்கப்பட்ட மாயபிம்பம் தோற்றுவிக்கப்படுகிறது.
  • ஒரு பொருள், குவி லென்சின் முக்கிய குவியத்திற்குள் (u<f) வைத்து லென்சில் மறுபுறத்தின்  வழியாகப் பொருளைக் காண வேண்டும்.
  • குவிலென்சின் முக்கிய குவியத்திற்கும், ஒளியியல் மையத்திற்கும் இடையே பொருள் வைக்கப்படும் போது, லென்ஸ் ஆனது   நேரான, பெரிதாக்கப்பட்ட மாயப் பிம்பத்தை  பொருள்  இருக்கும் அதே பக்கத்தில் தோற்றுவிக்கிறது.
  • பிம்பத்தின் தொலைவானது, தெளிவுறு காட்சியின் மீச்சிறு தொலைவுக்குச் (D) சமமாக இருக்கும். (குறைபாடற்ற கண்ணிற்கு D = 25 செ.மீ.

எளிய நுண்ணோக்கியின்  பயன்பாடுகள்:

  • இது கடிகாரம் பழுது பார்ப்பவர்கள் மற்றும் ஆவரணம்  செய்பவர்கள்பயன்படுத்துகின்றனர்.
  • சிறிய எழுத்துக்களைப் படிக்க உதவுகிறது,
  • பூக்கள் மற்றும் பூச்சிகளின் பாகங்களை உற்று நோக்கப் பான்படுகிறது.
  • தடயவியல் துறையில், கைரேகைகளைப் பகுத்தறியப் பயன்படுகிறது.  
Similar questions