India Languages, asked by kunichanpradeep146, 11 months ago

தொலைணோக்கியின் வகைகளை விலக்குக அவற்றின் நிறை குறைகளை எழுதுக

Answers

Answered by tasneemsajjad50
0

Answer:

mujhe ye language ni aati follow me...

Answered by steffiaspinno
0

தொலைநோக்கியின் வகைகள்:    

  • ஒளியியல் பண்புகளை அடிப்படையாகக் கொண்டு தொலைநோக்கிகள் இரண்டு வகைப்படும்.  

    1. ஒளிவிலகல் தொலைநோக்கிகள்.  

   2. ஒளி எதிரொளிப்பு தொலைநோக்கிகள்.

  • ஒளி எதிரொளிப்பு தொலைநோக்கிகள் கோளக ஆடிகள் பயன்படுத்தப்படுகின்றன.
  • கிரிகேரியன், நியூட்டன், கேஸ்கிரைன் தொலைநோக்கிகள் போன்றயை ஓளி எதிரொளிப்பு தொலை நோக்கிகளுக்கு எடுத்துக்காட்டுகள் ஆகும்.
  • தொலைநோக்கிகளை பயன்படுத்தி காணக்கூடிய பொருள்களை அடிப்படையாகக் கொண்டு தொலைநோக்கிகள் இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன.
  1. வானியல் தொலைநோக்கிகள்
  2. நிலப்பரப்பு தொலைநோக்கிகள்
  • வானியல் தொலை நோக்கிகளில் கிடைக்கும் இறுதி பிம்பமானது தலைகீழ் பிம்பமாக 5 இருக்கும்.
  • எனவே, இத்தொலைநோக்கிகள் புவிப்பரப்பில் உள்ள பொருள்களைக் காண்பதற்கு ஏற்றவை அல்ல என்பதால் நிலப்பரப்பு தொலைநோக்கிகள்  பயன்படுத்தப்படுகின்றன.
  • நேரான இறுதி பிம்பத்தை உருவாக்குவது மட்டுமே வானியல் தொலைநோக்கிகளுக்கும்  நிலப்பரப்பு தொலைநோக்கிகளுக்கும் இடையே உள்ள முக்கிய வேறுபாடு ஆகும்.

தொலைநோக்கிகள் நன்மைகள்:

  • கோள்கள், விண்மீன்கள், விண்மீன் திறள்கள் குறித்த விரிவான பார்வையைத் தருகிறது.
  • தொலைநோக்கியுடன் ஒளிப்படக்கருவியை இணைப்பதன் மூலம் வான் பொருள்களை ஒளிப்படம் எடுக்கலாம்.
  • குறைவான செறிவடைய ஒளியிலும் தொலைநோக்கியை பயன்படுத்தலாம்.

குறைபாடுகள்:

  • தொலைநோக்கிகளைத் தொடர்ந்து பராமரித்தல் வேண்டும்.
  • அவற்றை எளிதாக வேறு இடத்திற்கு எடுத்துச் செல்ல முடியாது.  
Similar questions