அ) ஜூல் வெப்ப விதி வரையறு.நிக்கல் மற்றும் குரோமியம் கலந்த உலோகக்
கலவை மின்சார வெப்பமேற்றும் சாதனமாக
பயன்படுத்தப்படுவது ஏன்?ஒரு மின் உருகு இழை எவ்வாறு
மின்சாதனங்களை பாதுகாக்கிறது?
Answers
Answered by
2
plz mate translate it into english
Answered by
3
ஜூல் வெப்ப விதி:
- ஒரு மின்தடையில் உருவாகும் வெப்பமானது அதன் வழியே பாயும் மின்னோட்டத்தின் இருமடிக்கு நேர் விகிதத்திலும் , மின் தடைக்கு நேர் விகிதத்திலும் மின்னோட்டம் பாயும் காலத்திற்கு நேர் விகிதத்திலும் இருக்கும்.
- நிக்கல் மற்றும் குரோமியம் கலந்த நிக்ரோம் எனும் கலவையானது வெப்பத்தினை உண்டாக்க பயன்படுகிறது.
- ஏனெனில் இப்பொருள் அதிக மின்தடை மற்றும் அதிக உருகுநிலை கொண்டது, விரைவில் ஆக்சிகரணத்திற்கு உள்ளாகாது.
மின் உருகு இழை :
- மின்சுற்றோடு தொடராக இணைக்கப்படுவது மின் உருகு இழையாகும் .
- சுற்றில் அதிகளவு மின்னோட்டம் பாயும் போது ஜுல் வெப்ப விளைவால் மின்உருகு இழை உருகி மின்சுற்று துண்டிக்கப்படுகிறது.
- எனவே, மின்சுற்றும், மின்சாதனங்களும் சேதமடைவதிலிருந்து பாதுகாக்கப்படுகிறது.
- குறைந்த உருகுநிலையைக் கொண்ட பொருள்களால் மின்உருகு இழை செய்யப்படுகிறது.
Similar questions