வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்சுற்றை
விளக்கவும். (படம் தேவையில்லை)
Answers
Answered by
0
Answer:
நவீன வீடுகளில் மிகவும் பொதுவான வகை வயரிங் அல்லாத அளவிலான (என்எம்) கேபிள் வடிவத்தில் உள்ளது, இது ஒரு பாதுகாப்பு பிளாஸ்டிக் உறைக்குள் மூடப்பட்ட இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனிப்பட்ட கம்பிகளைக் கொண்டுள்ளது.
Answered by
0
வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்சுற்று:
- மின்மாற்றியிலிருந்து வரக்கூடிய மின்னோட்டமானது முதலில் முதன்மை மின்னளவி பெட்டிக்கு கொண்டு வரப்படுகிறது.
- இந்த முதன்மை மின்னளவிப் பெட்டி இரண்டு முக்கிய பாகங்களைக் கொண்டுள்ளது.
(i) மின்உருகு இழை,
(ii) மின்னளவிப் பெட்டி.
- வீடுகளுக்கு வரும் மின்னோட்டமானது இரண்டு விதமான மின்காப்பிடப்பட்ட கம்பிகள் மூலமாக கொண்டு வரப்படுகின்றன.
- இந்த இரண்டு கம்பிகளில் சிவப்பு காப்புறை கொண்ட கம்பி மின்னோட்ட கம்பி என அழைக்கப்படுகிறது.
- கறுப்பு காப்புறை உள்ள மற்றொரு கம்பி நடுநிலை கம்பி என அழைக்கப்படுகிறது.
- வீட்டில் பயன்படுத்தக்கூடிய மின்பல்புகள், மின்விசிறிகள் போன்றவற்றிற்கு 5 A அளவிலான குறைந்த திறன் வழங்கும் சுற்றுக்கள் பயன்படுத்தப்படுகின்றன.
- குளிர்சாதன பெட்டிகள், நீர்சூடேற்றிகள், மின்சலவைபெட்டி , ரொட்டி சுடும் அடுப்பு, மின்சார அடுப்பு, மின்சூடேற்றி, வெந்நீர் கொதிகலன் போன்றவற்றிற்கு 15 A அளவிலான அதிக திறன் வழங்கும் சுற்றுகள் பயன்படுத்தப்படுகின்றன.
Similar questions