காப்பர் சல்பேட் கரைசலை கலக்குவதற்கு நிக்கல் கரண்டியை பயன்படுத்தலாமா? உனது கூற்றை நியாயப்படுத்துக
Answers
Answered by
0
ஒற்றை இடப்பெயர்ச்சி வினை
- ஒற்றை இடப்பெயர்ச்சி வினையானது ஒரு தனிமம் மற்றும் ஒரு சேர்மத்திற்கு இடையே நடைபெறும் வினை ஆகும்.
- இந்த இடப்பெயர்ச்சி நடைபெறும் போது சேர்மத்தில் உள்ள தனிமம் ஆனது தனித்த நிலையில் உள்ள தனிமத்தினால் இடப்பெயர்ச்சி செய்யப்பட்டு இவை இரண்டும் ஒன்று சேர்ந்து ஒரு புதிய சேர்மம் உருவாகும்.
- எடுத்துக்காட்டாக A + BC → AB + C என்பதை கூறிலாம்.
- காப்பர் சல்பேட் கரைசலை கலக்குவதற்கு நிக்கல் கரண்டியினை பயன்படுத்த கூடாது.
- ஏனெனில் காப்பரினை விட நிக்கல் அதிக வினைபுரியும் திறன் உடையது.
- காப்பர் சல்பேட் கரைசலை நிக்கல் கரண்டியில் கலக்கும் போது நிக்கல், காப்பர் சல்பேட் கரைசலுடன் ஒற்றை இடப்பெயர்ச்சி வினையில் ஈடுபட்டு காப்பர் சல்பேட் கரைசலில் இருந்து காப்பரை இடப்பெயர்ச்சி அடைய செய்யும்.
Answered by
0
Answer:
Similar questions