வனங்களை மேலாண்மை செய்வதும், வன
உயிரினங்களை பாதுகாப்பதும் ஏன் ஒரு
சவாலான பணியாகக் கருதப்படுகிறது.
Answers
Answered by
0
வன மேலாண்மை மற்றும் வன உயிரினங்கள் பாதுகாப்பு
- பெருகி வரும் மக்கள் தொகை பெருக்கத்தின் காரணமாக மக்களின் தேவை, அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சியினால் அதீத இயற்கை வளங்களின் பயன்பாட்டினால் அவற்றின் அளவு குறைகிறது.
- இயற்கை வளங்களை பாதுகாப்பது என்பது ஒரு நாட்டின் சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கான முக்கிய பங்காக உள்ளது.
- இயற்கை வளங்களின் குறைவினால் அவற்றினை பாதுகாக்க ஒரு சமநிலையான பராமரிப்பு அவசியம் தேவைப்படுகிறது.
- இயற்கை வளங்களின் அதீத பயன்பாடு மற்றும் காடுகள் அழிப்பு முதலியனவற்றினால் பல வன உயிரிகள் அழிந்தன.
- பல உயிரினங்கள் அருகி வரும் நிலையில் உள்ளன.
- எனவே தான் வனங்களை மேலாண்மை செய்வதும், வன உயிரினங்களை பாதுகாப்பதும் ஒரு சவாலான பணியாகக் கருதப்படுகிறது .
Similar questions