ராலே சிதறல் விதியைக் கூறுக.
Answers
Answered by
6
ராலே சிதறல் விதி
ராலே ஒளிச் சிதறல்
- சூரிய ஒளிக் கதிர்கள் புவியின் வளிமண்டலத்தில் நுழையும் போது வளிமண்டலத்தில் உள்ள வாயு அணுக்கள் மற்றும் மூலக்கூறுகளால் சிதறல் அடைய செய்யப்படும் நிகழ்விற்கு ராலே ஒளிச் சிதறல் என்று பெயர்.
ராலே சிதறல் விதி
- ராலே சிதறல் விதியின் படி, ஓர் ஒளிக் கதிர் சிதறல் அடையும் அளவு ஆனது, படுகின்ற அந்த ஒளிக்கதிரின் அலைநீளத்தின் நான்மடிக்கு எதிர்த் தகவில் இருக்கும்
- அதாவது சிதறல் அளவு ∝ 1 / λ4 ஆகும்.
- ராலே சிதறல் விதியின் படி, அதிக அலைநீளம் கொண்ட நிறத்தை விட குறைந்த அலைநீளம் கொண்ட நிறமானது அதிகமாக சிதறல் அடைகிறது.
Similar questions