கூற்று: உலோகப்பரப்புடைய மின்கருவிகளில்
மூன்று காப்புறை பெற்ற கம்பிகள்
பயன்படுத்தப்பட்டிருக்கும்.
காரணம்: இந்த இணைப்பினால் அதனோடு
இணைக்கப்படும் கம்பிகள் சூடாவது
தடுக்கப்படும்.
Answers
Answered by
0
கூற்று மற்றும் காரணம்
- கூற்று சரியானது ஆகும்.
- ஆனால் காரணம் சரியானது அல்ல.
விளக்கம்
- உலோகப் பரப்புடைய மின்கருவிகளில் மூன்று காப்புறை பெற்ற கம்பிகள் பயன்படுத்தப்பட்டிருக்கும்.
- இதில் இரண்டு விதமான மின் காப்பிடப்பட்ட கம்பிகள் மூலமாகவே வீட்டிற்கு மின்னோட்டம் வருகிறது.
- இந்த இரண்டு கம்பிகளில் ஒன்று சிவப்பு காப்புறை உடைய கம்பி (மின்னோட்ட கம்பி) ஆகும்.
- மற்றொரு கம்பி கறுப்பு காப்புறை உடைய கம்பி (நடுநிலை கம்பி) ஆகும்.
- இந்த இரு கம்பி மின்னளவிப் பெட்டியுடன் இணைக்கப்பட்டு உள்ளன.
- வீட்டிலுள்ள மின்சுற்றில் மூன்றாவது கம்பியாக பச்சை நிற காப்புறை உள்ள கம்பி பயன்படுத்தப்படுகிறது.
- இந்த கம்பியை புவித் தொடுப்புக் கம்பி என்று அழைப்பர்.
- இது மின் கசிவினால் ஏற்படும் மின்னதிர்ச்சியினை தடுக்கிறது.
Similar questions