India Languages, asked by mokurojusrujana5312, 9 months ago

மின்னழுத்தம் மற்றும் மின்னழுத்த வேறுபாடு
வரையறு.

Answers

Answered by Anonymous
2

மின்னழுத்தம் என்பது மின் தன்மை உள்ள பொருட்களைச் சூழ்ந்துள்ள மின்புலத்தால் ஏற்படும் அழுத்தம்.

ஒரு தொட்டியில் தண்ணீர் இருந்து, அத்தொட்டியின் அடியிலே ஒரு ஓட்டை இருந்தால், அவ்வோட்டையின் வழியே நீர் பீய்ச்சி அடிக்கும்.

நீரை உந்தி வெளியே தள்ளுவது அந்த ஓட்டைக்கு மேலே உள்ள நீரின் அழுத்தம் தான்

Answered by steffiaspinno
1

மின்னழுத்தம் மற்றும் மின்னழுத்த வேறுபாடு

மின்னழுத்தம்

  • ஓரலகு நே‌ர் ‌‌மி‌ன்னூ‌ட்‌ட‌த்‌தினை மி‌ன்‌ வில‌க்க விசை‌க்கு எ‌திராக  முடி‌விலா தொலை‌வி‌ல் இரு‌ந்து ஒரு கு‌றி‌ப்‌பி‌ட்ட பு‌ள்‌ளி‌க்கு கொ‌ண்டு வர செ‌‌ய்ய‌ப்படு‌ம் வேலையே அ‌ந்த பு‌ள்‌ளி‌‌யி‌‌ன்  ‌மி‌‌ன்னழு‌த்த‌ம் என அழை‌க்க‌ப்படு‌‌கிறது.
  • ஒரு கட‌த்‌‌தி‌யி‌ல் ‌மி‌ன்னூ‌ட்ட‌ம் ஆனது உய‌ர்‌ ‌மி‌ன்னழு‌த்த‌ம் உ‌ள்ள பு‌ள்‌ளி‌யி‌ல் இரு‌ந்து குறை ‌மி‌ன்னழு‌த்த‌ம் உ‌ள்ள பு‌ள்‌ளி‌க்கு செ‌ல்லு‌ம். ‌
  • மி‌ன்னழு‌த்த‌த்‌தி‌ன் அலகு வோ‌ல்‌ட் எ‌ன்பது ஆகு‌ம்.  

‌மி‌ன்னழு‌த்த வேறுபாடு  

  • ஓரலகு நே‌ர் ‌மி‌ன்னூ‌ட்ட‌த்‌தினை ஒரு பு‌ள்‌ளி‌யி‌லிரு‌ந்து ம‌‌ற்றொரு பு‌ள்‌ளி‌க்கு ‌மி‌ன் ‌வில‌க்க ‌விசை‌க்கு எ‌திராக நக‌‌ர்‌த்த செ‌ய்ய‌ப்படு‌கிற வேலையே அ‌ந்த இரு பு‌ள்‌ளிகளு‌க்கு இடையே  உ‌ள்ள ‌மி‌ன்னழு‌த்த வேறுபாடு ஆகு‌ம்.
  • மி‌ன்னழு‌த்த‌ வேறுபா‌ட்டின் அலகு வோ‌ல்‌ட் எ‌ன்பது ஆகு‌ம்.  
Similar questions