India Languages, asked by kanprabha81, 11 months ago


தேசிய ஒருமைபாடு கட்டுரை

Answers

Answered by hariprakash2857
1

Answer:

தேசிய ஒருமைப்பாடு. 

முப்பது கோடி முகமுடையள் -உயிர் மொய்ம்புற ஒன்றுடையாள், செப்பு மொழி பதினெட்டுடையாள் எனில் சிந்தனை ஒன்றுடையாள் என மகா கவி பாரதியாரால் வேற்றுமையில் 

ஒற்றுமை பற்றி பாராட்டி பாடப்பட்ட நமது நாடு இந்திய தேசம் ஆகும். நாம் விரும்பும் நாடு எது எனபதை சொல்ல வந்த நாமக்கல் கவிஞர், 

“வேலையில்லாதவர் யாருமில்லை -முற்றும் 

வீணருக்கிங்கே வேலையில்லை 

கூலியிலாதவர் யாருமிலை-சும்மா 

கும்பிட்டுத் தின்கின்ற கும்பலில்லை” 

எனக் கூறினர். ஆனால், அவருக்கும் முன்பே 1835 ஆம் ஆண்டில் வரலாற்று ஆசிரியரும் அரசியல் வாதியுமான மெக்காலே பிரபு ஆங்கில நாடாளுமன்றத்தில் இவ்வாறு கூறினார் 

“ நான் இந்தியாவின் நீள அகலங்களின் குறுக்கெ பயணம் செய்துள்ளேன். ஆயினும் அங்கே ஒரு பிச்சைக்காரனையோ, திருடனான ஒருவனையோ, நான் காணவே இல்லை. அத்தனை அதிக அளவிலான செல்வச் செழிப்பும் அத்தனை உயர்ந்த அறப் பண்புகளும், அத்தனை 

உயரிய திறமிக்க மக்களையும் கண்டேன்” என்றார். 

நாமக்கல் கவிஞர் காண விரும்பிய நாடு உண்மையில் ஏற்கெனவே இங்கு இருந்த நிலையில், பின் எப்படி இப்படி ஒற்றுமை இல்லாமல் பொருளாதாரத்தில் நலிந்து, பிச்சைக்காரர்கள் மலிந்து விட்ட நாடாக மாறிப் போயிற்று, என்பதனை ஆராயும் முன் 

தேசிய ஒருமைப்பாடு என்றால் என்ன என்பதை நாம் தெரிந்து கொள்வோம். நம் நாட்டில் வாழும் ஒவ்வொரு தனிமனிதரின் சமயம், இனம், குலம், கோத்திரம், கலாச்சாரம், ஆகிய பேதங்களைப் பாராமல் மக்கள் அனைவரும் ஒருவரே என்னும் 

ஒற்றுமை உணர்வே தேசிய ஒருமைப்பாடு ஆகும். 

நாம் வாழும் இந்தியத் தாய்திரு நாட்டில், பல்வேறு இனத்தவர், பல்வகை மொழி பேசுபவர், மாநிலத்துக்கு மாநிலம் வித்தியாசமான கலாச்சாரத்துடன் வாழ்ந்து வருகின்றனர். இத்தகைய சாதி மத பேதங்களே நமது நாட்டின் அழகு அம்சங்கள் ஆகும். 

ஆயினும் இந்த நாட்டின் பண்பாடு, இந்தியத் தாயின் அரும் தவப் புதல்வர் நாம் என எண்ண வைப்பது ஆகும். வேற்றுமையில் ஒற்றுமைக்கு இன்று வரையில் முன்னுதாரணமாகத் திகழ்வது நமது பாரத நாடு மட்டுமே ஆகும். இந்த ஒற்றுமைக்கு அவ்வப்போது இடையூறுகள் 

ஏற்படும்போது, வெளி நாட்டவரின் படை எடுப்புகளின் போதும் இந்த ஒற்றுமையை சீர்குலைக்க இயலவில்லை என்பதே வரலாறு கூறும் உண்மை ஆகும். 

பழங்காலத்தில் இந்த நாடு சிறு மற்றும் பெரு அரசுகளாகவும், அவ்வகை குறு நில மன்னர்கள், அரசியல் பேராசை காரணமாக அவ்வப்போது தங்களுக்குள் சண்டை இட்டுக் கொண்டு தம்மை பேரரசாக மாற்ற முயன்ற போதெல்லாம், சமயம் ஒரு முக்கிய காரணமாக இருக்கவில்லை. 

கடந்த மூன்று நூற்றாண்டுகட்கு முன்னர், ஆங்கில அரசு கிழக்கு இந்தியக் கம்பெனி என்ற பெயரில் வாணிகம் செய்ய வந்தவர்கள், இந்த நாடு முழுவதையும், பிடித்து, ஆள வந்த பின்னர், இந்த நாட்டு மன்னர்களும் மக்களும் ஒன்று கூடிட இயலாமல் 

“பிரித்து ஆளுதல்” எனும் தந்திரம் மூலம் வேற்றுமைப் படுத்தி ஆள்வதில் தேர்தவர்களாய் இருந்தனர். அதனால், ஒவ்வொரு சமூகத்துக்கும் ஒவ்வொரு விதத்தில் அவர்கள், உதவி செய்வது குறைவாகவோ நிறைவாகவோ இருந்து வந்துள்ளது. இதனால், அரசியல், சமூக , பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அப்படியே பேணப்பட்டு, தங்கள் ஆட்சியை பலப் படுத்திக் கொண்டனர். இவ்வாறு சாதி, மத, இன, குல, பேதங்களால் நம் மக்கள் ஒருவரை ஒருவர் எதிர்த்து சண்டை இடுவதைக் கண்டே பாரதி அன்றே பாடினார். 

ஒன்று பட்டால் உண்டு வாழ்வே - நம்மில் 

ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே 

நன்றிது தேர்ந்திடல் வேண்டும் - இந்த 

ஞானம் வந்தாற்பின் நமக்கெது வேண்டும்? 

என்பது நம் எல்லோர்க்கும் அவசியமான பாடமாகும் 

பாரத சமுதாயம் வாழ்கவே, என்று பாடினான் அண்டை நாடுகள் ஆகிய சீனா, பாகிஸ்தான் ஆகியவற்றுடன் சண்டை இட்ட போதும், தேசியப் பேரிடர் என பேரிடர்கள் வரும்போதும் மட்டும், சாதி மத இன பாகுபாடு இன்றி உதவிடும் நம் மக்கள் இவை இல்லாத காலங்களிலும் நாம் ஒன்றக இருக்க வேண்டும் என்பதைக் குறித்தே நமது அரசியல் சாசன முன்னுரையில் குறிப்பிட்டு இருப்பது போல், நாட்டு மன்னராய், சமுக மத சார்பற்ற சுதந்திரக் குடியரசு நாட்டின் 

மக்களாய் நாம் வாழ வேண்டும். 

வாழ்க தேசிய ஒற்றுமை, வாழ்க இந்தியா.

Similar questions