கட்டுரை எழுதுக. தலைப்பு-முன்னுரை-மின்சாரம் தயாரிப்பில் பலவகை முறைகள்-என்றும் கிடைக்கும் சூரிய சக்தி- புதுப்பிக்கத்தக்க எரிசக்தி- மக்களுக்கு விழிப்புணர்வு- தொழில் வளர்ச்சி பொருளாதாரத்தில் அதன் பங்கு- முடிவுரை.
Answers
Answer:
மின்சார தயாரிப்பு
Explanation:
முன்னுரை
மின்சாரம் என்பது ஒரு பொருளை இயக்குவதற்கு தேவைப்படும் ஆற்றல் ஆகும்.அதனை எவ்வாறு தயாரிக்கலாம் எவ்வாறு பயன்படுத்தலாம் அது இயற்கைக்கு கேடு விளைவிக்குமா விளைவிக்காது என்பதை பற்றியும் இக்கட்டுரையில் காண்போம்.
மின்சாரம் தயாரிப்பில் பல வகைமுறைகள்
நாம் மின்சாரத்தை காற்று நீர் இயற்கை எரிபொருள் ஷேல் எரிவாயு சூரிய சக்தி ஆகியவற்றை கொண்டு தயாரிக்க முடியும்.
என்றும் கிடைக்கும் சூரிய சக்தி
சூரிய சக்தி என்பது தீர்ந்து போகாத சுற்றுச்சூழலுக்கு ஏற்ற ஆற்றல் ஆகும். நாம் சூரிய சக்தியை வைத்து மின்சாரத்தை எளிதாகத் தயாரிக்க முடியும். சூரிய குக்கர் சூரிய ஹீட்டர் போன்றவையெல்லாம் சூரிய சக்தியை கொண்டு இயங்கும் பொருட்களாகும்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி
காற்று நீர் சூரிய சக்தியின் போன்றவையெல்லாம் புதுப்பிக்கத்தக்க வளங்களாகும். இவற்றைக் கொண்டு மின்சாரத்தை உருவாக்கும் போது நிலக்கரியின் தேவை குறைந்து கனிம வளங்கள் பாதுகாக்கப்படுகின்றன. இவ்வாறு செய்வதால் சுற்றுச்சூழலுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாது.
மக்களுக்கு விழிப்புணர்வு
நான் புதுப்பிக்கத்தக்க ஆற்றல்களை வைத்து மின்சாரம் தயாரித்தாலும் மக்கள் அதனை சரியான வழியில் பயன்படுத்துவதில்லை அதிக நேரம் மின் விளக்குகள் மற்றும் மின்சார விசிறிகளை இயக்கிவிட்டு மின்சாரத்தை வீணாக்குகிறார்கள். இருப்பினும் நாம் மின்சாரத்தை சேமிப்பது குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
தொழில் வளர்ச்சி
நீர் காற்று சூரிய சக்தி மற்றும் பல வளங்களை பயன்படுத்தி மின்சாரத்தை தயாரிப்பதற்கு பல்வேறு தொழிற்சாலைகளில் வேலை பார்க்க பல்வேறு தொழிலாளர்கள் தேவைப்படுகின்றனர். எனவே மின்சாரத்தை தயாரிக்க இதுபோன்ற பல்வேறு தொழிற்சாலைகளை உருவாக்கும் அவசியம் கூடி அதில் வேலை பார்க்க பல்வேறு தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது இதன் மூலம் தொழில் நன்கு வளர்ச்சி அடைகிறது. இது பொருளாதாரத்தில் நல்ல பங்கு வகிக்கிறது.
முடிவுரை
இக்கட்டுரையின் மூலம் நாம் மின்சாரத்தை எப்படி தயாரிக்கிறோம் அதனை எப்படி பயன்படுத்துகிறோம் என்பனவற்றையெல்லாம் தெரிந்து கொண்டோம். எனவே இதற்குப் பின்னரும் மின்சாரத்தை வீணாக்காமல் அதனை சேமித்து சுற்றுச்சூழலுக்கு நல்லதைச் செய்வோம்.
கருத்து :- காற்றுள்ளபோதே மின்சாரம் எடுத்துக்கொள்