. நியான் வாயுவின் எலக்ட்ரான் நாட்டம் பூஜ்ஜியம்
ஆக காரணம் _________
அ. நியுட்ரானின் உறுதியான வரிசை அமைப்பு
ஆ. எலக்ட்ரானின் உறுதியான கட்டமைப்பு
இ. குறைந்த உருவளவு
ஈ. அதிக அடர்த்தி
Answers
Answered by
0
எலக்ட்ரானின் உறுதியான கட்டமைப்பு
எலக்ட்ரான் நாட்டம்
- எலக்ட்ரான் நாட்டம் என்பது ஒரு தனித்த நடுநிலை உடைய வாயு நிலை அணு ஒன்றின் இணைதிறன் கூட்டில், ஒரு எலக்ட்ரானை சேர்த்து, அதன் எதிர்மின் சுமையுடைய அயனியை உருவாக்கும் போது வெளியேற்றப்படும் ஆற்றல் ஆகும்.
- அயனியாக்கும் ஆற்றலைப் போல, எலக்ட்ரான் நாட்டமும் தொடரில் இடப்புறத்திலிருந்து, வலப்புறமாக அதிகரித்தும், தொகுதியில் மேலிருந்து கீழாக குறைந்தும் காணப்படும்.
- இதன் அலகு KJ/mol ஆகும்.
நியான்
- நியான் என்பது மந்தவாயுக்கள் தொகுதியைச் சேர்ந்ததாகும்.
- இந்த மந்த வாயுக்கள் எலக்ட்ரான்களை ஏற்கும் தன்மையற்றவை.
- ஏனென்றால், அவற்றின் வெளிமட்ட கூட்டில் உள்ள s மற்றும் p ஆர்பிட்டால்கள் முழுமையாக எலக்ட்ரான்களால் நிரம்பி இருக்கும்.
- அதனால் மேலும் ஒரு எலக்ட்ரானை சேர்ப்பது இயலாது.
- எனவே மந்த வாயுக்களின் எலக்ட்ரான் நாட்டம் பூஜ்ஜிய மதிப்பை பெறுகின்றன.
- எலக்ட்ரானின் உறுதியான கட்டமைப்பே இதற்கு காரணமாகும்.
Similar questions