ஒளிச்சேர்க்கையின்போது வெளிப்படும் ஆக்ஸிஜன்
____________லிருந்து கிடைக்கிறது.
Answers
Answered by
1
நீர்
ஒளிச் சேர்க்கை (photo synthesis)
- சூரிய ஒளியினை பயன்படுத்தி தற்சார்பு ஊட்ட உயிரினங்கள் (ஆல்காக்கள், தாவரங்கள், பச்சைய நிறமிகளைக் கொண்ட சில பாக்டீரியங்கள் முதலியன) தமக்கு தேவையான உணவினை தாமே தயாரித்து கொள்ளும் நிகழ்விற்கு ஒளிச்சேர்க்கை (photo = light, synthesis = to build) என்று பெயர்.
- சூரிய ஒளியின் முன்னிலையில், கார்பன் டை ஆக்சைடு மற்றும் நீரின் உதவியுடன் தாவரங்களின் இலைகளில் உள்ள பச்சையத்தில் ஒளிச்சேர்க்கை நடைபெறுகிறது.
- இதன் விளைவாக கார்போ ஹைட்ரேட் (குளுக்கோஸ்) உருவாக்கப்பட்டு ஸ்டார்ச்சாக மாற்றப்படுகிறது.
- இந்த நிகழ்வில் நீர் மூலக்கூறுகள் பிளக்கப்படும் போது ஆக்சிஜன் வாயு உருவாக்கப்பட்டு வெளியேற்றப்படுகிறது.
- கார்பன் டை ஆக்ஸைடு + நீர் → குளுக்கோஸ் + நீர் + ஆக்ஸிஜன்
Answered by
0
Answer:
ஒளிசேர்க்கையின்போது வெளிப்படும் ஆக்ஸிஜென் நீரிலிருந்து கிடைக்கிறது
Similar questions