இலையிடைத்திசு (மீசோபில்) பற்றி குறிப்பு எழுதுக.
Answers
Answered by
6
Answer:
உங்கள் பதில் இதோ.....
தாவரம் அல்லது நிலைத்திணை என்பது மரம், செடி, கொடி, புற்கள் போன்றவற்றைக் குறிக்கும் ஒரு பெரும் உயிரினப் பிரிவாகும். இவ்வகை உயிரினங்கள் ஓரிடத்திலுருந்து மற்றோர் இடத்திற்கு தானே நகராமல் இருப்பதால் இவைகளை நிலைத்திணை என்பர். சுமார் 350,000 தாவர வகைகள் உள்ளதாக மதிப்பிடப்படுகின்றது..
இது உங்களுக்கு புரியும் என்று நினைக்கின்றேன்.....
நன்றி..வணக்கம்...
Answered by
9
இலையிடைத்திசு (மீசோபில்)
- இரு வித்திலைத் தாவர இலையின் மேற்புறத் தோலுக்கும், கீழ்புறத் தோலுக்கும் இடையே காணப்படும் தளத்திசுவிற்கு இலை இடைத்திசு அல்லது மீசோபில் என்று பெயர்.
- இதில் இரு வகை செல்கள் காணப்படுகின்றன.
பாலிசேட் பாரன்கைமா
- இது மேற்புறத் தோலுக்கு கீழே காணப்படுகிறது.
- பாலிசேட் பாரன்கைமா செல்கள் நெருக்கமாக அமைந்த நீளமான செல்கள் ஆகும்.
- இவை அதிகமான பசுங்கணிகங்களுடன் காணப்படுகின்றன.
- பாலிசேட் பாரன்கைமா செல்கள் ஒளிச்சேர்க்கை பணியில் ஈடுபடுகின்றன.
ஸ்பாஞ்சி பாரன்கைமா
- பாலிசேட் பாரன்கைமாவிற்கு கீழே ஸ்பாஞ்சி பாரன்கைமா காணப்படுகிறது.
- ஸ்பாஞ்சி பாரன்கைமாவில் கோளவடிவ அல்லது உருளையான அல்லது ஒழுங்கற்ற வடிவம் கொண்ட செல்கள் நெருக்கமின்றி செல் இடைவெளிகளுடன் காணப்படுகின்றன.
- இவை வாயு பரிமாற்ற பணியில் ஈடுபடுகின்றன.
Similar questions