அட்டையின் தொண்டைப்புற நரம்புத்திரள் எந்த உறுப்பு மண்டலத்தின் ஒரு பகுதி
அ) கழிவுநீக்க மண்டலம்
ஆ) நரம்பு மண்டலம்
இ) இனப்பெருக்க மண்டலம்
ஈ) சுவாச மண்டலம்
Answers
Answered by
0
நரம்பு மண்டலம்
- அட்டையின் நரம்பு மண்டலம் ஆனது மைய, பக்கவாட்டு மற்றும் பரிவு நரம்பு மண்டலங்கள் என மூன்று வகையாக பிரிக்கப்பட்டு உள்ளது.
- மைய நரம்பு மண்டலம் ஆனது நரம்பு வளையம் மற்றும் ஓர் இணை வயிற்றுப்புற நரம்பு நாண் முதலியனவற்றினை கொண்டு உள்ளது.
- அட்டையின் தொண்டை பகுதியினை சுற்றி நரம்பு வளையம் அமைந்து உள்ளது.
- நரம்பு வளையம் ஆனது தொண்டை மேல் நரம்புத் திரள் (மூளை) , தொண்டைச் சுற்று நரம்பு இணைப்பு மற்றும் தொண்டை கீழ் நரம்புத் திரள் முதலியனவற்றினை கொண்டுள்ளது.
- தொண்டை கீழ் நரம்புத்திரள் தொண்டையின் அடிப்பகுதியில் உள்ளது.
- இது நான்கு இணை நரம்புத் திரள்களின் இணைவினால் உருவாக்கப்பட்டு உள்ளது.
Answered by
0
Answer:
அட்டையின் தொண்டைப்புற நரம்புத்திரள் நரம்பு மண்டலத்தின் ஒரு பகுதியாகும்
Similar questions