. அபோபிளாஸ்ட் வழி கடத்துதலில் நீரானது செல்
சவ்வின் வழியாக செல்லினுள் நுழைகிறது.
Answers
Answered by
0
சரியா தவறா
- மேலே கூறப்பட்டு உள்ள வாக்கியம் தவறானது ஆகும்.
விளக்கம்
அப்போபிளாஸ்ட் வழி
- நீரானது அப்போபிளாஸ்ட் வழி கடத்துதலில் செல் சுவர் மற்றும் செல் இடைவெளியின் வழியே செல்கிறது.
- இந்த முறை கடத்துதலில் நீரானது எந்த வித சவ்வினையும் கடக்காமல் செல்கிறது.
சிம்பிளாஸ்ட் வழி
- நீரானது சிம்பிளாஸ்ட் வழி கடத்துதலில் நீரானது செல்லின் வழியே செல்கிறது.
- அதாவது சிம்பிளாஸ்ட் கடத்துதல் முறையில் நீரானது செல்லின் பிளாஸ்மா சவ்விற்கு சென்று சைட்டோபிளாசத்தினை கடந்து பிளாஸ்மோடெஸ்மேட்டா வழியாக அருகிலுள்ள செல்களுக்கு செல்கிறது.
- இந்த வகை கடத்துதலில் நீரானது செல் சவ்வின் வழியே செல்வதால் கடத்துதல் மெதுவாக நடக்கிறது.
- செறிவு சரிவின் அடிப்படையிலேயே சிம்பிளாஸ்ட் வகை கடத்துதல் அமைந்து உள்ளது.
Answered by
0
Answer:
Similar questions