India Languages, asked by niyajuddin7116, 10 months ago

. டெண்ட்ரான்கள் என்பவை செல்
உடலத்திலிருந்து தூண்டல்களை வெளிப்புறமாக
கடத்தும் நீளமான நரம்பு நாரிழைகள்

Answers

Answered by steffiaspinno
0

ச‌ரியா தவறா

  • மேலே கூற‌ப்ப‌ட்டு உ‌ள்ள கூ‌ற்று தவறானது ஆகு‌ம்.

‌விள‌க்க‌ம்

  • நமது உடலில் நடைபெறும் செயல்களை கட்டுபடுத்தி அவற்றை ஒருங்கிணைக்கும் பணியானது நரம்பு மண்டலத்தை சார்ந்ததாகும்.
  • நியூரான்கள்  என்பவை நரம்பு மண்டலத்தின் அமைப்பு மற்றும் செயலின் அடிப்படை அலகாகும்.
  • மனிதனில் காணப்படும் மிக நீளமான செல் நரம்பு செல்  அல்லது நியூரான்கள் எனப்படும்.
  • நியூரான்கள் சைட்டான், டெண்ட்ரைட்டுகள், ஆக்சான் என மூன்று பகுதிகளால் ஆனது.
  • செல்லின் உடலமானது சைட்டான் என்று அழைக்க‌ப்படுகின்றது.
  • இதன் மையபகுதியில் சைட்டோபிளாசம் நிறைந்திருக்கும்.

டெண்ட்ரைட்டுகள்

  • செல் உடலத்தின் வெளிப்புறத்தில் கிளைகள் போன்று காணப்படும் பகுதிக்கு டெண்ட்ரைட்டுகள் என்று பெயர்.
  • இவை நரம்புகளுக்கு அனுப்பப்படும் தூண்டல்களை அதாவது புறச் சூழ்நிலையால் உடலின் உறுப்புகளில் ஏற்படும் மாற்றங்களை செல் உடலத்தை நோக்கி கடத்துகிறது.
Similar questions