நரம்பு மண்டலத்திற்கும், நாளமில்லா சுரப்பி
மண்டலத்திற்க்குமிடையே இணைப்பாகச்
செயல்படும் உறுப்பு எது?
Answers
Answer:
நாளமில்லாச் சுரப்பிகள் அல்லது நாளமில் சுரப்பிகள் (இலங்கை வழக்கு: கானில் சுரப்பிகள் அல்லது அகஞ்சுரக்கும் சுரப்பிகள், ஆங்கிலம்: endocrine glands) என்பவை தாம் சுரக்கும் இயக்குநீர்களை, நாளங்களினூடாகக் கடத்தாமல், நேரடியாக இரத்தத்தில் கலக்க விட்டு உடலின் பல பகுதிகளுக்கும் அனுப்பும் சுரப்பிகளாகும். இவை அகச்சுரப்பித் தொகுதி யின் அங்கங்களாகும். கூம்புச் சுரப்பி, கபச் சுரப்பி, கணையம், சூலகம், விந்தகம், கேடயச் சுரப்பி, இணைகேடயச் சுரப்பி, ஐப்போத்தலாமசு, அண்ணீரகச் சுரப்பி ஆகியன நம் உடலில் உள்ள முக்கிய நாளமில்லாச் சுரப்பிகள் ஆகும். கபச் சுரப்பி மற்றும் ஐப்போத்தலாமசு ஆகியவை நரம்புசார் நாளமில்லாச் (neuroendocrine) சுரப்பிகள் ஆகும்.
வளர்ச்சி மற்றும் வளர்சிதை மாற்றங்கள் போன்ற உடற் தொழிற்பாடுகளை நாளமில்லாச் சுரப்பிகள் சுரக்கும் இயக்குநீர் கட்டுப்படுத்துகின்றது. இயக்குநீரின் அளவு கூடினாலோ குறைந்தாலோ நாளமில்லாச் சுரப்பி நோய்கள் உருவாகின்றன.
Explanation:
PLEASE MARK ME AS BRAINLIEST and LIKE ME PLEASE
ஹைப்போதலாமஸ்
- முன் மூளை, நடுமூளை, பின் மூளை என மூன்று பகுதிகளாக மூளை பிரிக்கபட்டுள்ளது.
- பெருமூளை, டயன்செஃப்லான் ஆகிய பகுதிகள் முன் மூளையில் காணப்படுகின்றது.
- பெருமூளையின் உட்புற பகுதி மெடுல்லா என்று அழைக்கபடுகிறது.
- இந்த மெடுல்லாவை சுற்றி அமைந்திருக்கும் பகுதிக்கு தலாமஸ் என்று பெயர்.
- தலாமஸ் பகுதிக்கு கீழே அமைந்துள்ள பகுதி ஹைப்போதலாமஸ் என்று கூறப்படுகிறது.
- நாளமில்லா சுரப்பி மண்டலத்தையும், தலாமஸ் சுரப்பி மண்டலத்தையும் ஹைப்போதலாமஸ் இணைக்கிறது.
- எல்லா சுரப்பிகளையும் கட்டுபாட்டில் வைத்திருக்கும் பிட்யூட்டரி சுரப்பியின் முன் கதுப்பினால் சுரக்கப்படும் ஹார்மோன்களை கட்டுபடுத்துவது ஹைப்போதலாமஸ் ஆகும்.
- மேலும் இது பசி, தாகம், மயக்கம், தூக்கம், வியர்வை, கோபம், பயம் ஆகியவற்றை கட்டுபடுத்தும் திறன் கொண்டவையாக இருக்கின்றன.