India Languages, asked by SAIniky71071, 10 months ago

பொருத்துக;
ஆக்சின் ஜிப்ரில்லா, பியூஜிகுராய் = உதிர்தல்
எத்திலின் தேங்காயின் இளநீர்= கணுவிடைப் பகுதி நீட்சி
அப்சிசிக் அமிலம் ,முளைக் குருத்து உறை= நுனி ஆதிக்கம்
சைட்டோகைனின், பசுங்கணிகம்= பழுத்தல்
ஜிப்ரல்லின்கள், கனிகள்= செல் பகுப்பு

Answers

Answered by GAMER5050
2

Answer:

தாவர வளரூக்கி (Plant hormone), அல்லது தாவர வளர்ச்சி நெறிப்படுத்தி அல்லது தாவர ஹார்மோன் எனப்படுவன தாவரங்களின் வளர்ச்சியை நெறிப்படுத்தும், வேதிப்பொருட்களால் ஆன ஒருவகை இயக்குநீர் ஆகும். இவை தாவரங்களின் குறிப்பிட்ட பகுதிகளில் உருவாக்கப்படும் மூலக்கூறுகளாகவும், மிகக் குறைந்த அளவிலேயே காணப்படுவனவாகவும் உள்ளன. வளரூக்கிகள் இலக்குக் கலங்களிலும் (cell), பிற இடங்களிலும் செயல்முறைகளில் மாற்றத்தை உருவாக்குகின்றன. விலங்குகளில் இருப்பதுபோல் வளரூக்கிகளைச் சுரக்கும் சுரப்பிகள் தாவரங்களில் இருப்பதில்லை. தாவர வளரூக்கிகள், தாவர வளர்ச்சியை நெறிப்படுத்துகின்றன. விதை வளர்ச்சி, பூக்கும் காலம், பூக்களின் பால் (ஆணா, பெண்ணா) என்பவற்றையும் தீர்மானிக்கின்றன. அவை இழையங்களில் எவை மேல்நோக்கியும், எவை கீழ் நோக்கியும் வளரவேண்டும் என்பதையும் தீர்மானிக்கின்றன. இலைகளின் உருவாக்கம், தண்டு வளர்ச்சி, பழம் பழுத்தல், தாவரத்தின் வாழ்வுக்காலம் அதன் இறப்பு என்பவற்றையும் தாவர வளரூக்கிகள் கட்டுப்படுத்துகின்றன. எனவே தாவர வளர்ச்சிக்கு வளரூக்கிகள் இன்றியமையாதன ஆகும்.

Explanation:

PLEASE MARK ME AS BRAINLIEST and LIKE ME PLEASE

Answered by steffiaspinno
2

பொரு‌த்துத‌ல்  

ஆ‌க்‌சி‌ன் - முளைக் குருத்து உறை - நுனி ஆதிக்கம்

  • முளை‌க் குரு‌த்து உறை‌யி‌ன் நு‌னி‌யி‌ல் ஆ‌‌தி‌க்‌க‌ம் செலு‌த்து‌ம் தாவர ஹா‌ர்மோ‌ன் ஆ‌க்‌சி‌ன் ஆகு‌ம்.  

எத்திலின் - கனிகள் - பழுத்தல்

  • எ‌‌த்‌தி‌லி‌ன் க‌னிக‌ள் பழு‌த்தலை ஊ‌க்கு‌வி‌க்‌கிறது.  

அப்சிசிக் அமிலம் - பசுங்கணிகம் -  உதிர்தல்

  • உ‌தி‌ர்தலை க‌ட்டு‌ப்படு‌த்து‌ம் ஹா‌ர்மோனான அ‌ப்‌சி‌சி‌க் அ‌மில‌ம் பசு‌ங்க‌ணிக‌த்‌தி‌ல் காண‌ப்படு‌கிறது.  

சைட்டோகைனின் -  தேங்காயின் இளநீர்  - செல் பகுப்பு

  • செல் பகுப்பு அல்லது சைட்டோகைனசிஸ் எ‌ன்ற ‌நிக‌ழ்‌வினை ஊ‌க்கு‌ம் தாவர ஹா‌ர்மோ‌ன் சை‌ட்டோகை‌னி‌‌ன் ஆகு‌ம்.
  • இது தே‌ங்கா‌யி‌ன் இள‌நீ‌ரி‌ல் அதிகமாக காண‌ப்படு‌கிறது.  

ஜிப்ரல்லின்கள் - ஜிப்ரில்லா பியூஜிகுராய் - கணுவிடைப் பகுதி நீட்சி

  • நெ‌ல்‌லி‌ன் கணு‌விடை‌ப் பகு‌தி‌யி‌ல் ஜிப்ரில்லா பியூஜிகுராய் எ‌ன்ற பூ‌ஞ்சை‌யி‌னா‌ல்  ஏ‌ற்ப‌ட்ட ‌நீ‌ட்‌சியை ‌ஜி‌ப்ர‌‌ல்லி‌ன் ஹா‌ர்மோ‌ன் தூ‌ண்டு‌கிறது.  
Similar questions