India Languages, asked by SidhuSaab2976, 11 months ago

. மாதவிடாயின் போது மாதவிடாய் சுகாதாரம்எவ்வாறு பராமரிக்கப்படுகிறது ?

Answers

Answered by GAMER5050
0

Answer:

மாதவிலக்கு அல்லது மாதவிடாய் என்பது ஒரு பூப்படைந்த பெண்ணின் உடலில், மாதந்தோறும் சுழற்சி முறையில் நிகழும் ஒரு உடலியங்கியல் மாற்றமாகும். இது பெண்ணின் இனப்பெருக்கத் தொகுதியிலுள்ள ஒரு உறுப்புக்களில் ஒன்றான கருப்பையிலிருந்து, யோனியினூடாக மாதத்தில் 3-7 நாட்கள் குருதியுடன் சேர்ந்து கருப்பையின் உள் சீதமென்சவ்வும் வெளியேறுவதை குறிக்கும்.[1] இடக்கரடக்கலாக வீட்டில் இல்லை, வீட்டிற்கு வெளியே, வீட்டுக்குத் தூரம், வீட்டு விலக்கு என்றும் சொல்வழக்கு உண்டு. மருத்துவப்படி, ஒவ்வொரு மாதமும், கருத்தரிப்பிற்கான தயார்ப்படுத்தலுக்காக, கருப்பையின் உள் மடிப்புகளில் (endometrium) போதிய இரத்தம் நிரம்பி இருக்கிறது. ஒரு பெண் கர்பமடைவாரேயானால், கருப்பையில் தங்கும் கருக்கட்டிய முட்டைக்கு போதிய ஊட்டச்சத்தை வழங்குவதற்காகவே, இந்த குருதி நிறைந்த மடிப்புக்கள் உருவாகியிருக்கும். பெண் கருத்தரிக்காத நேரங்களில் இம்மடிப்புகளில் உள்ள தேவையற்ற இழையங்களும், அவற்றுடன் சேர்ந்து மடிப்புக்கள் இருக்கும் நுண்ணிய குருதிக் குழாய்களிலிருந்து வெளிவரும் குருதியும் வெளியே கழிவாக தள்ளப்படுகிறது. இந்நிகழ்வு மாதந்தோறும் சுமார் மூன்று முதல் ஏழு நாட்களுக்கு நடைபெறுகிறது. இதனையே மாதவிடாய் என்கிறோம். இந்த மாதவிடாய் வெளியேற்றம் மாதத்திற்கு ஒருமுறை யோனிமடல் ஊடாக நடைபெறுகிறது. இறுதி நாளோ அல்லது கடைசி இரு நாட்களோ வெளியேற்றம் குறைவாக இருக்கும். சில வேளைகளில் முதல் நாள் குறைவாக இருக்கும்.

மாதவிடாய் மாதவிடாய்ச் சுழற்சியின் ஒரு பகுதியாகும். இச்சுழற்சியின் நீட்டம் 21 நாட்களிலிருந்து 35 நாட்கள் வரை இருக்கும். முதல் மாதவிடாய் பொதுவாக 10 வயதிற்கும் 16 வயதிற்கும் இடையே ஒரு பெண் பூப்படையும்போது ஏற்படுகிறது. இந்நிகழ்வு அனைத்து பாலூட்டிகளிலும் நடந்தாலும், மனிதன், மற்றும் பரிணாம வளர்ச்சியில் மனிதனுடன் நெருங்கிய தொடர்புடைய சிம்பன்சி போன்ற சில விலங்கினங்களிலேயே இவ்வாறு வெளிப்படையாக கருப்பை மடிப்பு வெளியேறுகிறது. மற்ற பாலூட்டிகளில், இனப்பெருக்க சுழற்சியின் இறுதிக் காலத்தில் கருப்பைமடிப்புகள் மீளவும் உள்ளே உறிஞ்சப்படுகின்றது.

Explanation:

PLEASE MARK ME AS BRAINLIEST and LIKE ME PLEASE

Answered by steffiaspinno
0

மாதவிடாய் சுழற்சி

  • கருவுறாத முட்டை வெடித்து இரத்தபோக்குடன் வெளியேறுதலையே மாதவிடாய் சுழற்சி என்கிறோம்.
  • பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி 11 – 13 வயதிலிருந்து நடைபெற துவங்குகிறது.
  • இதனையே பூப்படைதல் என்கிறோம்.
  • மாதவிடாய் சுழற்சியின் போது பெண்கள் சுத்தமாக இருக்க வேண்டும்.
  • நாப்கின்களை குறிப்பிட்ட கால இடைவெளியில் மாற்றுதல் வேண்டும்.
  • அவ்வாறு செய்வதன் மூலம் பிறப்புறுப்பில் உண்டாகும் வியர்வினையும், நோயினையும் வராமல் தடுக்கலாம்.
  • மாதவிடாய் காலத்தில் ஏற்படும் தசைப்பிடிப்பை குணப்படுத்த வெந்நீரை கொண்டு பிறப்புறுப்புகளை தூய்மைபடுத்த வேண்டும்.
  • பிறப்புறுப்புகளில் உண்டாகும் வியர்வையை வராமல் தடுக்க நல்ல காற்றோட்டமுள்ள, தளர்வான உடைகளை அணிய வேண்டும்.
  • இந்த சுகாதார முறைகளை பின்பற்றுவதன் மூலம் நோய்கள் வராமல் தடுக்கலாம்.
Similar questions