எட்டுகல்வி மட்டும் கல்வி இல்லை சிறு கட்டுரை
Answers
Explanation:
எட்டுகல்வி மட்டும் கல்வி இல்லை
கல்வி (Education) என்பது குழந்தைகளை, உடல், மற்றும் மன வளர்ச்சியில் அறிவு, நல்லொழுக்கம் ஆகிய மதிப்புடன் வளர்க்க உதவும் ஒரு சமூக அமைப்பு ஆகும். கல்வியாளர்கள் கூற்றின்படி இளைய தலைமுறையினரை முறையாக வழி நடத்துவதிலும், சமுதாயத்தில் பங்களிப்பு செய்ய வைப்பதிலும் கல்வி முக்கியப் பங்கு வகிக்கிறது. கல்வி என்பது ஒரு சமூக நிறுவனம். அறிவு, திறமை போன்றவற்றையும் தந்து ஒரு புதிய சமூகத்தை உருவாக்கி பண்பாடு, நடத்தை, போன்றவற்றையும் தந்து மனிதனை ஒரு முழுமையான ஆற்றல் உள்ள மனிதனாக மாற்றம் அடைய செய்கிறது. இது சமுதாய நுட்பத் தகைமை ஏற்படுத்துவதையும் கல்வி கற்றலையும், கற்பித்தலையும் குறிக்கும். இது திறன்கள்,தொழில்கள், உயர்தொழில்கள் என்பவற்றோடு, மனம், நெறிமுறை, அழகியல் என்பவை சார்ந்த வளர்ச்சியையும் சமுதாய வளர்ச்சியில் பங்கு பெறச்செய்யும் அமைப்பு ஆகும்.
கல்வி ஒரு மனிதனின் வாழ்க்கை முழுவதும் வருகிறது. ஆனால் குழந்தைப் பருவத்தில் கற்கும்போது முழுமையான பரிமாணம் அடைந்து முழுமையான மனிதனாகவும், சமுதாயத்திற்கு உதவிகளை அளிக்கும்படியும் மாற்றம் அடைகின்றனர்.
கல்வி என்ற சொல்லின் பொருள்
கல்வி என்ற தமிழ்ச் சொல் கல் (ஆய்வு செய்) என்ற வேர்ச் சொல்லில் இருந்து வருகின்றது. கல்வி என்ற சொல்லிற்கான ஆங்கிலச் சொல் Education என்பதாகும். இந்தச் சொல் ēducātiō என்ற இலத்தின் மொழிச் சொல்லிலிருந்து பெறப்பட்டதாகும். இந்த ēducātiō சொல்லானது வளர்த்தல் என்ற பொருளைக் குறிக்கிறது. மேலும் இது கற்பித்தல், பயிற்றுவித்தல் என்னும் பொருளைத் தரும் ēducō என்ற சொல்லை அடிப்படையாகக் கொண்டது. இந்தச் சொல்லிற்கு ஒத்த சொல் வெளிக்கொணரல், உயர்த்திவிடல், முன்னேற்றிவிடல் போன்ற பொருளைத் தரும் ēdūcō என்பதாகும். எனவே கல்வி என்பது தகுந்த சூழ்நிலையை உருவாக்கி மனிதர்களை உள்ளார்ந்த தகுதிகளை வெளியில் கொண்டு வருவது ஆகும்.
கல்வி என்பது புறத்திலிருந்து நம் அகத்திற்கு செல்வது. நம் உடம்பிலுள்ள அறியும் கருவிகள் மெய், வாய், கண், மூக்கு, செவி . இவை மூலமாக வெளியிலிருந்து செய்திகள் உள்ளே செல்கின்றன.