தேசிய வருவாய் கணக்கிட்டில் உள்ள சிரமங்கள் யாவை?
Answers
Answered by
0
தேசிய வருவாய் கணக்கிட்டில் உள்ள சிரமங்கள்
மாற்றுச் செலுத்துதல்கள்
- மானியங்கள், உதவித் தொகை மற்றும் ஓய்வூதியம் முதலியன அரசின் செலவுகள் ஆகும்.
- ஆனால் இவைகள் தேசிய வருவாயில் சேர்க்கப்படுவதில்லை.
- தேசியக்கடனுக்காக செலுத்தப்படும் வட்டியும் இது போன்றதே ஆகும்.
தேய்மானங்கள் கொடுப்பளவு மதிப்பிடுவதில் சிக்கல்
- தேசிய வருவாயிலிருந்து தேய்மானங்கள் கொடுப்பளவு, விபத்து இழப்பீடு மற்றும் பழுது கட்டணங்களை கழிப்பது என்பது சிக்கல் வாய்ந்தது ஆகும்.
- இவைகளை அதிக கவனத்துடன் சரியான மதிப்பீடு செய்து கழிக்க வேண்டும்.
பணம் செலுத்தப்படாத சேவைகள்
- வீட்டில் பெண்கள் செய்யும் உணவு தயாரித்தல், தையல், பழுது பார்த்தல், துவைத்தல், குழந்தைகளை வளர்த்தல் முதலியன அர்ப்பணிப்பு செயல்கள் தேசிய வருமானத்தில் சேர்க்கப்படுவது கிடையாது.
சட்ட விரோத செயலில் இருந்து பெறப்பட்ட வருமானம்
- சூதாட்டம், கடத்தல் மற்றும் சட்ட விரோதமாக மதுவினை தயாரித்தல் முதலியன சட்ட விரோத நடவடிக்கை மூலம் பெறப்படும் வருமானங்கள் தேசிய வருமானத்தில் சேர்க்கப்படுவது இல்லை.
- மேலும் சுய நுகர்விற்கு உற்பத்தி செய்தல், மூலதன இலாபம் மற்றும் புள்ளி விபரச் சிக்கல் முதலியனவும் தேசிய வருமாய் கணக்கிட்டில் சிக்கல் நிறைந்ததாக உள்ளது.
Similar questions