பணவீக்கத்தின் வகைகள் பற்றி எழுதுக.
Answers
Answered by
3
பண வீக்கத்தின் வகைகள்
தவழும் பண வீக்கம்
- மிக குறைவான மற்றும் எளிமையான விகிதத்தில் பண வீக்கம் உள்ள நிலைக்கு தவழும் பண வீக்கம் என்று பெயர்.
- நீண்ட காலத்தில் விலைவாசி உயர்வதை மக்கள் எளிதாக உணர முடியாத அளவில் உள்ள பண வீக்கம் தவழும் பண வீக்கம் ஆகும்.
- இது மிதமான பணவீக்கம் என்றும் அழைக்கப்படுகிறது.
நடக்கும் பண வீக்கம்
- மிதமான வேகத்தில் 3 முதல் 9 சதவீதம் என்ற ஒற்றை இலக்கத்தில் பண வீக்கம் இருந்தால் அதற்கு நடக்கும் அல்லது நகரும் பண வீக்கம் என்று பெயர்.
ஓடும் பண வீக்கம்
- ஓடும் பண வீக்கம் என்பது ஆண்டு பண வீக்க விகிதம் 10 முதல் 20 சதவீதத்திற்குள் இருப்பது ஆகும்.
- இது வேகமான விலை வாசி அதிகரிப்பதை ஓட்டத்துடன் உவமைப்படுத்தி கூறுவதால் இது ஓடும் பண வீக்கம் என்று அழைக்கப்படுகிறது.
தாவும் பண வீக்கம்
- சமாளிக்க முடியாத அளவிற்கு இரண்டு அல்லது மூன்று இலக்க சதவீதத்தில் (20-100) உள்ள பணவீக்கம் தாவும் அல்லது உயர் பண வீக்கம் என அழைக்கப்படுகிறது.
Similar questions
English,
5 months ago
Social Sciences,
11 months ago
Social Sciences,
1 year ago
Social Sciences,
1 year ago
Economy,
1 year ago