பணத்தின் பணிகளை விளக்குக.
Answers
Answered by
5
பணத்தின் பணிகள்
முதல் நிலை பணிகள்
பணம் ஓர் பரிவர்த்தனை கருவி
- நவீன பரிவர்த்தனைகளில் பணம் ஒரு இடையீட்டு கருவியாக செயல்பட்டு வருகிறது.
- இது பணத்தின் அடிப்படை பணி ஆகும்.
பணம் ஓர் மதிப்பின் அளவுகோல்
- பொருட்கள் மற்றும் பணிகளை மதிப்பளவை செய்வது பணத்தின் இரண்டாவது முக்கிய பணி ஆகும்.
இரண்டாம் நிலை பணிகள்
பணம் ஒரு மதிப்பு நிலைக்கலன்
- பணம் நீர்மைத் தன்மை கொண்டிருப்பதால் அதை எப்பொழுது வேண்டுமானாலும் நிலம், இயந்திரம் மற்றும் தளவாடம் போன்ற சந்தைப்படுத்தும் பொருளாக மாற்றலாம்.
- அந்த சொத்துகளை மீண்டும் பணமாக மாற்றிக் கொள்ள இயலும்.
பணம் வருங்கால செலுத்துதல்களுக்கான ஓர் அடிப்படை
- கடன்களை வாங்குவதிலும், திருப்பி செலுத்துவதிலும் பண்ட மாற்று முறையில் இருந்த சிக்கல்களை பணம் சரி செய்துவிட்டது.
பணம் வாங்குதிறனை மாற்றிக்கொள்ளும் ஒரு கருவி
- நீண்ட தொலைவிலும், எல்லைக் கடந்தும் நடக்கும் வாணிபத்தில் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு வாங்கு திறனை மாற்றிக் கொள்ள பணம் பயன்படுகிறது.
- கடனுக்கான அடிப்படை, தேசிய வருவாய் பங்கீட்டிற்கு உதவுதல், இறுதிநிலைப் பயன்பாடுகள் மற்றும் இறுதிநிலை உற்பத்தி திறன்களை ஒப்பிடுதல், மூலதனத்தின் உற்பத்தி திறனை உயர்த்துதல் முதலிய துணைப் பணிகளை செய்கிறது.
இதர பணிகள்
- திரும்பச் செலுத்தும் திறனை தக்கவைத்தல், பொதுமைப்படுத்தப்பட்ட வாங்கு திறனை குறித்தல், மூலதனத்திற்கு நீர்மைத் தன்மையை தருதல் முதலியன இதர பணிகளையும் பணம் செய்கிறது.
Similar questions