Economy, asked by kalyan2227, 9 months ago

நபார்டின் பணிகள் யாவை?

Answers

Answered by ananyasingh10
0

Answer:

what are you asking? please ask in English or Hindi language.

Answered by steffiaspinno
4

நபார்டின் பணிகள்

  • நபா‌ர்டு வ‌ங்‌கி ஆனது விவசாயம், சிறுதொழில்கள், குடிசை மற்றும் கிராமத் தொழில்கள், கைவினைத் தொழில்கள் மற்றும் இதர ஊரக தொழில் நடவடி‌க்கைகளு‌க்கு மறுகடனை வழ‌ங்‌கி ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சியை மேம்படுத்தும் ப‌ணி‌யி‌ல் ஈடுப‌ட்டு உ‌ள்ளது.
  • நபா‌ர்டு வ‌ங்‌கி ஆனது குறுகிய கால, மத்திய கால மற்றும் நீண்ட கால கடன்களை மாநில கூட்டுறவு வங்கிகள், வட்டார ஊரக வங்கிகள், நிலவள வங்கிகள் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட   நிதி நிறுவனங்கள் முத‌லியனவ‌ற்‌றி‌ற்கு வழ‌ங்கு‌கிறது.
  • மாநில அரசுகளுக்கு 20 ஆண்டு நீண்டகால கடன்களை கூட்டுறவு கடன் வழங்கும் சங்கங்களின் பங்கு முதலீட்டை வழங்குவத‌ற்காக தரு‌கிறது.
  • நபா‌ர்‌டு வ‌ங்‌கி ஆனது  ஆய்வு மற்றும் வளர்ச்சி நிதியினை பராம‌ரி‌‌த்து வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சிக்கான ஆய்வுகளை மேம்படுத்து‌ம் ப‌ணி‌யி‌ல் ஈடுபடு‌கிறது.  
Similar questions