பன்னாட்டு வாணிகத் தொன்மைக் கோட்பாட்டிற்கும் புதிய
கோட்பாட்டிற்குமிடையிலான வேறுபாடுகளை எழுது.
Answers
Answered by
0
பன்னாட்டு வாணிகத் தொன்மைக் கோட்பாட்டிற்கும் புதிய கோட்பாட்டிற்கும் இடையிலான வேறுபாடுகள்
தொன்மைப் பன்னாட்டு வாணிபக் கோட்பாடு
- உழைப்புச் சார்ந்த மதிப்புக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு பன்னாட்டு வாணிபம் விளக்கப்பட்டது.
- தொன்மைப் பன்னாட்டு வாணிபக் கோட்பாடு ஆனது உழைப்பு என்ற ஒரு காரணி மாதிரி ஆகும்.
- உழைப்பாளர்களின் உற்பத்தி திறன் வேறுபாடுகளே ஒப்புமைச் செலவு வேறுபாட்டிற்கு காரணமாக உள்ளதாக தொன்மைப் பன்னாட்டு வாணிபக் கோட்பாடு கூறுகிறது.
புதிய பன்னாட்டு வாணிபக் கோட்பாடு
- பொது மதிப்புக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு பன்னாட்டு வாணிபம் விளக்கப்பட்டது.
- புதிய பன்னாட்டு வாணிபக் கோட்பாடு ஆனது உழைப்பு மற்றும் மூலதனம் என்ற இரு காரணி மாதிரி ஆகும்.
- உற்பத்தி காரணிகளின் கிடைப்பளவு வேறுபாடுகளே ஒப்புமைச் செலவு வேறுபாட்டிற்கு காரணமாக உள்ளதாக புதிய பன்னாட்டு வாணிபக் கோட்பாடு கூறுகிறது.
Similar questions