Economy, asked by rahulragavendra3829, 11 months ago

பன்னாட்டுப் பொருளியலின் உள்ளடக்கத்தை பட்டியலிடுக

Answers

Answered by rakshitakumar46
0

Explanation:

HI MATE

SORRY

ENAK TAMIL padika teriyade

sorry

Answered by steffiaspinno
0

பன்னாட்டுப் பொருளியலின் உள்ளடக்க‌ம்  

தூய வாணிபக் கோ‌ட்பாடு

  • தூய வாணிபக் கோ‌ட்பாடு எ‌ன்பது  வாணிகம் செய்யப்படும் அளவு, அயல் வாணிப விகிதம், பண மாற்று விகிதம் பன்னாட்டு பொருள் வாணிக செலுத்து நிலை அ‌ல்லது கொடு‌ப்ப‌ல் ‌நிலை மற்றும் அயல் வாணிக செலுத்து நிலை ஆகியவற்றை விவரிக்கும் ப‌ன்னா‌ட்டு பொரு‌ளிய‌லி‌ன் ஒரு ‌பி‌ரிவு ஆகு‌ம்.  

கொ‌ள்கை‌‌ச் ச‌ச்சரவுக‌ள்

  • கொ‌ள்கை‌ச் ச‌ச்சரவுக‌ள் எ‌ன்ற ப‌ன்னா‌ட்டு பொரு‌ளிய‌லி‌ன் ‌பி‌ரி‌வி‌ல் பொரு‌ள் வாணிகம் முதலீடு மற்றும் தொழில்நுட்பம் இடம் பெயர்தல், செலாவ‌ணிக் கட்டுப்பாடுகள், பன்னாட்டு நிதி உதவி மற்றும் பன்னாட்டுக் கடன் அன்னிய நேரடி முதலீடு முத‌லியனவ‌ற்‌றினை ‌விள‌க்கு‌கிறது.

பன்னாட்டு வாணிகக் கூட்டமைப்பும் ஒன்றியங்களு‌ம்  

  • பன்னாட்டுக் கூட்டமைப்பு, சுங்கவரி ஒன்றியங்கள், பணவியல் ஒன்றியங்கள் மற்றும் நாடுகளு‌க்கு இடையே உ‌ள்ள பொருளாதார ஒத்துழைப்பு, அமைப்புகளின் மூலமாக நாடுகளின் பொருளாதாரம் இணைக்கப்பட்டு உ‌ள்ள ‌‌வித‌ம் முத‌லியனவ‌ற்‌றினை இ‌ந்த ‌பி‌ரிவு ‌விள‌க்கு‌கிறது.

பன்னாட்டு நிதி மற்றும் வாணிப ஒழுங்குபடுத்தும் நிறுவனங்க‌ள்  

  • பன்னாட்டு அமைப்புகள் நாடுகளு‌க்கு இடையே உ‌ள்ள பொருளாதார உறவுகளை மாற்றியமைக்கும் வித‌த்‌தினை ப‌ற்‌றி  இ‌ந்த ‌பி‌ரிவு ‌விள‌க்கு‌கிறது.  
Similar questions