கீழ்வருவனற்றுள் எது நேர்முக வரி?
அ) கலால் வரி
ஆ) வருமான வரி
இ) சுங்க வரி
ஈ) சேவை வரி
Answers
Answered by
1
வருமான வரி
நேர்முக வரி
- வரி என்பது எந்த ஒரு குறிப்பிட்ட நன்மையினையும் எதிர்பாராமல் கட்டாயமாக அரசுக்கு செலுத்தப்படக்கூடிய ஒன்று ஆகும்.
- நேர்முக வரி என்பது அரசிற்கு நேரடியாக செலுத்தக் கூடிய தனி நபரின் வருமானம் மற்றும் செல்வம் மீது விதிக்கப்படும் வரி என அழைக்கப்படுகிறது.
- நேர்முக வரியின் சுமையினை மற்றவருக்கு மாற்ற முடியாது.
- மேலும் நேர்முக வரி ஆனது வளர்வீத தன்மையினை உடையது ஆகும்.
- வரி ஆனது ஒரு நபரின் செலுத்தும் திறனுக்கு ஏற்ற வகையில் விதிக்கப்படுகிறது.
- அதாவது அதிகமாக வரி பணக்காரர்கள் மீது விதிக்கப்படுகிறது.
- குறைவான வரி ஏழை மக்கள் மீது விதிக்கப்படுகிறது.
- நேர்முக வரிக்கு உதாரணமாக வருமான வரி மற்றும் செல்வ வரி ஆகியவற்றினை கூறலாம்.
Similar questions