கீழே உள்ளவற்றில் எந்த வரி மைய
அரசின் பட்டியலில் இல்லை?
அ) தனிநபர் வருமான வரி
ஆ) நிறுவன வரி
இ) விவசாய வருமான வரி
ஈ) கலால் வரி
Answers
Answered by
0
விவசாய வருமான வரி
மைய அரசின் வருவாய் மூலங்கள்
- மைய அரசின் வருவாய் மூலங்களாக வரி வருவாய் மற்றும் வரியில்லா வருவாய் உள்ளது.
வரி வருவாய்
மைய அரசின் பட்டியலில் உள்ள வரிகள்
- தொழில் நிறுவனங்கள் மீதான வரி, ஏற்றுமதி வரி அடங்கிய சுங்க வரி, இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் மற்றும் புகையிலை போன்றவற்றின் மீது விதிக்கப்படும் கலால் வரி, வேளாண்மை நிலங்கள் நீங்கலான பண்ணை வரி, வேளாண் வருவாய் நீங்கலான மற்ற வருமான வரி, தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் விவசாய நிலங்கள் நீங்கலான சொத்துக்களின் மூலதன மதிப்பில் விதிக்கப்படும் வரி, வெளியிடப்படும் விளம்பரங்கள் உட்பட செய்திதாள் மீதான வரி, இரயில், கப்பல் மற்றும் விமான பயணிகள் மற்றும் சரக்குகள் மீதான வரி முதலியன மைய அரசின் பட்டியலில் உள்ள வரிகள் ஆகும்.
Similar questions