பொது நிதியின் எல்லைகளை விளக்குக
Answers
Answered by
4
Answer:
Which language is this?
Answered by
2
பொது நிதியின் எல்லைகள்
- பொது வருவாய், பொதுச் செலவு, பொதுக் கடன், நிதி நிர்வாகம், நிதிக் கொள்கை முதலியன பொது நிதியியலின் துணைப் பாடப்பிரிவுகள் ஆகும்.
பொது வருவாய்
- வரி மற்றும் வரியற்ற வருமானங்கள் போன்ற வருவாயினைப் பெருக்கக் கூடிய முறைகள் பற்றியும், வரிக் கொள்கை, வரி விகிதம், வரியின் பளு, வரியின் தாக்கம் மற்றும் அவற்றின் விளைவுகள் முதலியன பற்றியும் விளக்கும் பொது நிதியியலின் பாடப் பிரிவிற்கு பொது வருவாய் என்று பெயர்.
பொதுச் செலவு
- அரசின் செலவு, பொதுச் செலவின் விளைவுகள் மற்றும் பொதுச் செலவைக் கட்டுப்படுத்துதல் முதலியன சார்ந்த அடிப்படைக் கோட்பாடுகள் பொதுச் செலவு பகுதியில் உள்ளது.
பொதுக் கடன்
- உள்நாடு மற்றும் வெளிநாட்டின் மூலம் பெறக்கூடிய கடன்களுக்கான வளங்களைப் பற்றி படிக்கும் பிரிவே பொதுக் கடன் ஆகும்.
- இதில் பொதுக் கடன்களின் சுமை, அதன் விளைவுகள் மற்றும் திரும்பச் செலுத்தும் முறை முதலியன உள்ளன.
நிதி நிர்வாகம்
- அரசின் வரவு செலவு திட்டத்தின் பல்வேறு பகுதிகளைப் பற்றிய பாடப்பிரிவே நிதி நிர்வாகம் ஆகும்.
- இதில் வரவு செலவு திட்டத்தின் பல்வேறு நோக்கங்கள் மற்றும் அதை தயாரிப்பதற்கான வழிமுறைகள், நிதி ஒதுக்கீடு, மதிப்பீடு மற்றும் தணிக்கை முதலியன உள்ளன.
நிதிக் கொள்கை
- வரிகள், மானியங்கள், பொதுக்கடன் மற்றும் பொதுச் செலவு முதலியன இதில் அடங்கும்.
Similar questions