பொருளாதார வளர்ச்சியிலிருந்து முன்னேற்றத்தை வேறுபடுத்துக
Answers
Answered by
0
பொருளாதார முன்னேற்றம்
- பொருளாதார முன்னேற்றம் என்பது வளரும் நாடுகளின் பிரச்சனைகளைக் கையாளுவதாக உள்ளது.
- பொருளாதார முன்னேற்றத்தில் தொடர்ச்சியற்ற தன்னிச்சையான மாற்றங்கள் ஏற்படுகின்றன.
- பொருளாதார முன்னேற்றம் ஆனது உற்பத்தி அதிகரிப்பு, உற்பத்தி பொருட்களின் வகைகள், வளர்ச்சி மற்றும் கட்டமைப்பில் ஏற்படும் மாற்றங்கள் முதலியனவற்றினை குறிப்பிடுவதாக உள்ளது.
- பொருளாதார முன்னேற்றம் எண்ணிக்கை மற்றும் தர அடிப்படையில் அமைந்தது ஆகும்.
பொருளாதார வளர்ச்சி
- பொருளாதார வளர்ச்சி ஆனது வளர்ந்த நாடுகளின் பொருளாதார பிரச்சனைகளை பற்றியதாக உள்ளது.
- பொருளாதார வளர்ச்சி என்பது நீண்ட காலத்திற்கு, படிப்படியாகவும், நிதானமாகவும் ஏற்படும் மாற்றம் ஆகும்.
- பொருளாதார வளர்ச்சி ஆனது அதிக அளவான உற்பத்தியைக் குறிப்பதாக உள்ளது.
- பொருளாதார வளர்ச்சி ஆனது எண்ணிக்கை அடிப்படையில் அமைந்தது ஆகும்.
- அதாவது பொருளாதார வளர்ச்சி ஆனது தலா வருமான அதிகரிப்பினை குறிப்பதாக உள்ளது.
Similar questions