Economy, asked by ashmahajan5496, 11 months ago

பொருளாதார முன்னேற்றத்தின் சமூக குறியீடுகளை பட்டியலிடுக

Answers

Answered by steffiaspinno
0

பொருளாதார முன்னேற்றத்தின் சமூக குறியீடுக‌ள்

பொருளாதார முன்னேற்றம்  

  • பொருளாதார முன்னேற்றம் எ‌ன்பது வளரும் நாடுகளின் பிரச்சனைகளைக் கையாளுவதாக உ‌ள்ளது.
  • பொருளாதார மு‌ன்னே‌ற்ற‌த்‌தி‌ல் தொடர்ச்சியற்ற தன்னிச்சையான மாற்றங்கள் ஏ‌ற்ப‌டு‌‌கி‌ன்றன.
  • பொருளாதார மு‌ன்னே‌ற்ற‌ம் ஆனது உ‌ற்ப‌த்‌தி அ‌திக‌ரி‌ப்பு, உ‌ற்ப‌த்‌தி பொரு‌ட்க‌ளி‌ன் வகைக‌ள், வள‌ர்‌ச்‌சி ம‌ற்று‌ம் க‌ட்டமை‌ப்‌பி‌ல் ஏ‌ற்படு‌ம் மா‌ற்ற‌ங்க‌ள் முத‌லியனவ‌ற்‌றினை கு‌றி‌ப்‌பிடுவதாக உ‌ள்ளது.
  • பொருளாதார முன்னேற்றம் எண்ணிக்கை மற்றும் தர அடிப்படை‌யி‌ல் அமை‌ந்தது ஆகு‌ம்.  

சமூகக் குறியீடுகள்  

  • சமூகக் குறியீடுகள் எ‌ன்பவை மக்களின் அடிப்படை மற்றும் கூட்டுத் தேவையை நிவர்த்தி செய்வது ஆகு‌ம்.
  • மக்களின் சுகாதாரம், கல்வி, உணவு, குடிநீர், துப்புரவு மற்றும் வீட்டு வசதி முத‌லியன நேரடியாக வழங்கப்படும் அடிப்படைத் தேவை ஆகு‌ம்.
  • நேரடியாக வழங்கப்படும் அடிப்படைத் தேவைகளை‌க் கொ‌ண்டு சமூக ‌பி‌ன்னடை‌வினை த‌வி‌ர்‌க்கலா‌ம்.  
Similar questions