திட்டமிடலுக்கு எதிரான வாதங்களை எடுத்துரைக்கவும்
Answers
Answered by
2
திட்டமிடலுக்கு எதிரான வாதங்கள்
தன் விருப்பம்போல் செயல்பட இயலாமை
- தன் விருப்பம்போல் செயல்பட இயலாமையின் காரணமாக பொருளாதார வளர்ச்சிக்கு தடை உருவாகிறது.
- நுகர்வு, பணியை தேர்வு செய்தல், உற்பத்தி செய்தல் மற்றும் விலை நிர்ணயம் செய்தல் முதலியனவற்றில் தலையிடா பொருளாதாரத்தில் தன் விரும்பம் போல் செயல்பட அனுமதி இருந்தது.
- ஆனால் திட்டமிட்ட பொருளாதாரத்தில் மத்திய திட்டக்குழு நுகர்வோர், உற்பத்தியாளர் மற்றும் பணியாளர்களை கட்டுப்படுத்துகிறது.
தன் முனைப்புக் குறைதல்
- ஊக்கப்படுத்துதல் மற்றும் புதுமைகளை புகுத்துதல் முதலியனவற்றிற்கு மையப்படுத்தப்பட்ட திட்டமிடலில் நடைபெறுவது கிடையாது.
- இது வளர்ச்சியினை தடுக்கிறது.
அதிகமான நிர்வாக செலவு
- தொழில் மயமாக்கல், சமூக நீதி, நாட்டு நிலைமையை சமப்படுத்துதல் முதலியனவற்றினை நோக்கமாக உடைய திட்டமிடலுக்காக நாடு செலவிடும் தொகை ஆனது திட்டமிடலின் பலனாக கிடைக்கும் தொகையினை விட அதிகமாக உள்ளது.
முன் கணிப்பதில் உள்ள சிரமங்கள்
- மையப்படுத்தப்பட்ட திட்டமிடலில் நுகர்வு மற்றும் உற்பத்தி ஆகியவற்றினை முன் கூட்டியே துல்லியமாக கணிப்பது கடினமானது ஆகும்.
Answered by
3
Similar questions