புள்ளிவிவர வகைகள் யாவை?
Answers
Answered by
14
Answer:
புள்ளியியல் அல்லது புள்ளிவிபரவியல் என்பது, தரவுகளைச் சேகரிப்பு, ஒழுங்கமைப்பு, பகுப்பாய்வு, விளக்கம் என்பன குறித்த பாடத்துறை ஆகும். கள ஆய்வுகள், சோதனைகள் என்பவற்றின் வடிவமைப்புத் தொடர்பிலான தரவுச் சேகரிப்புத் திட்டமிடல் உட்பட மேற்குறித்தவற்றில் எல்லா சிறப்புகளையும் இத்துறை கையாள்கிறது.
Answered by
0
புள்ளி விவர வகைகள்
- புள்ளி விவரங்கள் இரு வகைகளாக பிரிக்கப்பட்டு உள்ளன.
- அவை முறையே அளவு விவரங்கள் மற்றும் பண்பு விவரங்கள் ஆகும்.
அளவு விவரங்கள் (Quantitative Data)
- குறிப்பிட்ட அலகில் அளவிடப்பட்டு எண் வடிவில் கூறப்படும் விவரங்களுக்கு அளவு விவரங்கள் என்று பெயர்.
- (எ.கா) வயது வருமானம், நிறுவனங்களின் எண்ணிக்கை முதலியன அளவு விவரங்களுக்கான உதாரணங்கள் ஆகும்.
பண்பு விவரங்கள் (Qualitative Data)
- சில பண்புகளை உள்ளனவா அல்லது இல்லையா என்று மட்டுமே சொல்ல இயலும்.
- (எ.கா) பால், இனம் முதலியன ஆகும்.
- சில பண்புகளை வரிசைப்படுத்த முடியும்.
- ஆனால் அவற்றை அளவிட முடியாது.
- (எ.கா) நேர்மை முதலியன.
- இவ்வாறு பண்புகளை சார்ந்த விவரங்களுக்கு பண்பு விவரங்கள் என்று பெயர்.
Similar questions