காந்தியடிகளை ஒரு மக்கள் தலைவராக உருமாற்றம் செய்ய உதவிய காரணிகள் என்ன என்று ஆராயவும்.
Answers
Answered by
5
காந்தியடிகளை ஒரு மக்கள் தலைவராக உருமாற்றம் செய்ய உதவிய காரணிகள்
- காந்தியடிகள் முதல் வகுப்பு பெட்டியிலிருந்து பீட்டர் மாரிட்ஸ்பர்க் ரயில் நிலையத்தில் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார்.
- இது அவருக்கு ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தியது.
- காந்தியடிகள் உண்மையின் வடிவமாக சத்தியாகிரகத்தை செயல் உத்தியாகப் பயன்படுத்தினார்.
- தமிழகத்தில் பயணம் மேற்கொண்ட போது ஏழை மக்கள் சரியான உடை இல்லாமல் இருந்ததை பார்த்து வருந்தி வேட்டிக்கு மாறினார்.
- சம்பரானில் தீன் காதியா என்ற முறையில் ஐரோப்பியர்களால் விவசாயிகள் பாதிக்கப்பட்டதை, காந்தியடிகள் எதிர்த்து வெற்றி அடைந்தார்.
- நாட்டு விடுதலைக்காக ஒத்துழையாமை இயக்கம், சட்ட மறுப்பு இயக்கம், வரி கொடா இயக்கம் முதலியன இயக்கத்தினை நடத்தி மக்களிடையே போராட்ட உணர்வினை ஊட்டினார்.
- 1930 ஆம் ஆண்டு தண்டி யாத்திரை மேற்கொண்டு உப்பு சத்தியாகிரகத்தை நடத்தினார்.
- தீண்டாமை, மது ஒழிப்பிற்கு எதிராக பாடுபட்டார்.
- வெள்ளையனே வெளியேறு இயக்கத்தினை நடத்தி ஆங்கிலேயர்களை அதிர வைத்தார்.
- இவை அனைத்தும் காந்தியடிகளை மக்களை வழிநடத்தும் தலைவராக மாற்றியது.
Similar questions