காந்திய இயக்கத்தின் ஒரு சிறந்த உதாரணமான சட்டமறுப்பு இயக்கம் குறித்து விரிவாக ஆராயவும்.
Answers
Answered by
1
சட்ட மறுப்பு இயக்கம்
- 1929 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஜவகர்லால் நேரு தலைமையில் லாகூரில் நடந்த இந்திய தேசிய காங்கிரசின் சிறப்பு கூட்டத்தில் 1930 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26ஆம் தேதி சுதந்திர திருநாளாக அறிவிக்கப்பட்டது.
- வரிகொடா இயக்கம் போன்ற சட்ட மறுப்பு இயக்கம் மற்றும் வன்முறையற்ற முறை ஆகியவற்றின் மூலமாக முழுமையான சுதந்திரத்தை அடைவது குறித்தும் நாடு முழுவதும் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
- சட்ட மறுப்பு இயக்கத்தினை தொடங்க காந்தியடிக்கு காங்கிரஸ் அங்கீகாரம் அளித்தது.
- பல கோரிக்கைகள் அடங்கிய மனுவினை ஆங்கில பிரதிநிதியிடம் அளித்த காந்தி, பிரதிநிதி பதில் அளிக்காததால் சட்ட மறுப்பு இயக்கத்தினை தீவிரப்படுத்தினார்.
- ஆங்கில அரசு உப்பின் மீது விதித்த வரியினை கண்டித்து காந்தியடிகள் 1930 ஆம் ஆண்டு தண்டியில் சட்டத்தினை மீறி உப்பினை காய்ச்சினார்.
- அதன்பிறகு நாட்டின் பல இடங்களில் உப்பு சத்தியாகிரகம் நடந்தது.
Similar questions