தமிழ்நாட்டில் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளைக் கோடிட்டுக் காட்டுக.
Answers
Answered by
0
தமிழ்நாட்டில் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள்
- வெள்ளையனே வெளியேறு இயக்கத்திற்கு மக்களை திரட்டும் பணியில் காமராசர் மறைமுகமாக ஈடுபட்டார்.
- வேலூர் மற்றும் பணப்பாக்கம் ஆகிய ஊர்களில் தந்தி, தொலைபேசிக் கம்பிகள் வெட்டப்படுதல் மற்றும் பொதுக் கட்டடங்களுக்கு தீ வைத்தல் ஆகிய போராட்டங்கள் நடந்தது.
- கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்றனர்.
- சூலூர் விமான நிலையம் தாக்கப்பட்டது.
- கோயம்புத்தூரில் இரயில்கள் தடம் புரளச் செய்தனர்.
- மதுரையில் இராணுவத்துடன் காங்கிரஸ் தொண்டர்கள் மோதலில் ஈடுபட்டனர்.
- காவல் துறையினரின் துப்பாக்கிச் சூடு ராஜ பாளையம், காரைக்குடி மற்றும் தேவ கோட்டை ஆகிய இடங்களில் நடைபெற்றது.
- இந்திய தேசிய ராணுவத்தில் (INA) அதிக எண்ணிக்கையில் ஆண்கள் மற்றும் பெண்கள் சேர்ந்தனர்.
Similar questions
Computer Science,
4 months ago
India Languages,
8 months ago
English,
8 months ago
English,
11 months ago
Math,
11 months ago